அனுராதபுரம் “எல்லாளன் நடவடிக்கை”: தாக்குதலில் பலியான 21கரும்புலிகளின் பெயர்களையும் புலிகள் அறிவித்துள்ளனர்… (தாக்குதலில் பலியானவர்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

Read Time:7 Minute, 45 Second

ltteblacktigersanurathapura.jpgஅனுராதபுர வான்படைத் தளம் மீதான நேற்றைய தாக்குதலில் லெப்.கேணல் வீமன், லெப். கேணல் இளங்கோ, மேஜர் மதிவதனன், கப்டன் தர்மினி, கப்டன் புரட்சி, மேஜர் சுகன், மேஜர் இளம்புலி, மேஜர் காவலன், கப்டன் கருவேந்தன், கப்டன் புகழ்மணி, மேஜர் எழில்இன்பன், கப்டன் புலிமன்னன், கப்டன் அன்புக்கதிர், கப்டன் சுபேசன், கப்டன் செந்தூரன், லெப். அருண், கப்டன் பஞ்சசீலன், மேஜர் கனிக்கீதன், கப்டன் ஈகப்பிரியா, கப்டன் அருள்மலர், கப்டன் ஈழத்தேவன் ஆகிய 21 கரும்புலிகளின் பெயர்களை புலிகள் அறிவித்துள்ளனர்.
ltteblacktigerskilledanurathapura1.jpgஇதேவேளை அனுராதபுர வான்படைத் தளம் மீதான நேற்றைய தாக்குதலுக்கு புலிகள் எல்லாளன் நடவடிக்கை என பெயர் சூட்டியுள்ளனர். இதுதொடாபாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தரைப்படையினரும் வான்படையினரும் இணைந்து நடத்திய இத்தாக்குதலுக்கு புலிகளின் தலைவர் எல்லாளன் நடவடிக்கை எனப் பெயா சூட்டியுள்ளார். அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் எல்லாளனைக் குறியீடு செய்யும் வகையிலேயே இத்தாக்குதலுக்கு தலைவர் எல்லாளன் நடவடிக்கை எனப் பெயர் சூட்டினார் என்று கூறினார்.

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய “எல்லாளன் நடவடிக்கை”யில் சாவடைந்த 21 கரும்புலிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.
1. லெப்.கேணல் வீமன் என்று அழைக்கப்படும் திருகோணமலையை நிலையான முகவரியாகவும், 4ஆம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கோபாலபிள்ளை பிரதீபன்
2. லெப். கேணல் இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி கண்டாவளை இல. 48 பெரியகுளத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட இராசதுரை பகீரதன்
3. மேஜர் மதிவதனன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், ஆறுமுகம் மகாதேவன் எண் 102-1 முரசுமோட்டை பரந்தனை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தயாசீலன்
4. கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா
5. கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்
6. மேஜர் சுகன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்
7. மேஜர் இளம்புலி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கவிதா இரணைப்பாலை புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட துரைரட்ணம் கலைராஜ்
8. மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்
9. கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்
10. கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்
11. மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்
12. கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்
13. கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்
14. கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்
15. கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்
16. லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன்
17. கப்டன் பஞ்சசீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்
18. மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி
19. கப்டன் ஈகப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி
20. கப்டன் அருள்மலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா
21. கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் சாவடைந்துள்ளனர்.

ltteblacktigersanurathapura.jpg
ltteblacktigersanurathapura1.jpg
ltteblacktigersanurathapura2.jpg
ltteblacktigerskilledanurathapura1.jpg
ltteblacktigerskilledanurathapura.jpg
ltteblacktigerskilledanurathapura2.jpg
ltteblacktigerskilledanurathapura3.jpg
ltteblacktigerskilledanurathapura4.jpg
ltteblacktigerskilledanurathapura5.jpg
ltteblacktigerskilledanurathapura6.jpg
ltteblacktigerskilledanurathapura7.jpg

Thankyou For……… WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவரை வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றனர்
Next post குழந்தையை பறித்து மருமகளை சித்திரவதை செய்த மாமியார் கைது