கரூர் அருகே வேளாண்துறை டிரைவர் தற்கொலை முயற்சி ஏன்?: போலீசார் விசாரணை!!

Read Time:1 Minute, 45 Second

3de7ada2-5f9e-479a-8c71-e00673eaeae0_S_secvpfகரூர் அருகே உள்ள காணியாளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமாபதி(வயது 32). இவர் கரூர் மாவட்டம் மாயனூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நர்மதா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் உமாபதி நேற்று வீட்டில் இருந்த விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி பசுபதி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தரப்பில் கேட்டபோது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். அதிகாரிகள் டார்ச்சர் எதுவும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தனர்.

இதுபற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா விசாரணை நடத்தி வருகிறார். சமீபகாலமாக அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்வதும், தற்கொலைக்கு முயற்சி செய்வதும் அதிகரித்துள்ளது. எனவே உமாபதி தற்கொலை முயற்சி சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு: 16 வாகனங்களுக்கு அனுமதி ரத்து!!
Next post வல்லநாடு அருகே கோவில் பீடத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை!!