ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராகிறார் பிளேர்

Read Time:1 Minute, 11 Second

இங்கிலாந்து நாட்டு பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். அவர் சமீபத்தில் தன் பதவியை கார்டன் பிரவுனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் என்ற புதிய பதவிக்கு அவர் நியமிக்கப்பட இருக்கிறார். இது பற்றி பிரஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோசி கூறுகையில், பிளேர் மிக முக்கியமான தலைவர். அவர் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள ஐரோப்பிய தலைவர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார் என்று தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு நாடு தலைவராக இருக்கும் முறையை ரத்து செய்து விட்டு, ஒரு தலைவரை நியமிப்பது என்றும் அவர் 2 ஆண்டு மற்றும் 6 மாதம் இந்த பதவியில் இருப்பார். கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாணவர்கள் உட்கொண்ட உணவு விஷமாகி ஒருவர் மரணம்; நால்வர் ஆபத்தான நிலையில்
Next post கென்ய நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களில் தேர்தல்