`பார்முலா 1′ கார்பந்தயம்: பின்லாந்து வீரர் ரெய்க்கோனன் சாம்பியன்

Read Time:1 Minute, 34 Second

2007-ம் ஆண்டுக்கான `பார்முலா1′ கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடந்தது. இதன் கடைசி மற்றும் 17-வது சுற்றுப்பந்தயம் பிரேசில் நாட்டில் உள்ள சாபாலோ நகரில் நடந்தது. சாம்பியன் பட்டம் பெறுவதில் ஹாமில்டன் (இங்கிலாந்து), சிமிரெய்க் கோனன் (பின்லாந்து), அலோன்சா (ஸ்பெயின்) ஆகிய 3 பேர் இடையே கடும் போட்டி இருந்தது. நேற்றைய பந்தயத்தில் சிமி ரெய்க்கோனன் வெற்றி பெற்றார். பிரேசில்வீரர் பெலிமாசா 2-வது இடத்தையும், பெர்னாண்டோ அலோன்சா 3-வது இடத்தையும் பிடித்தனர். ஒட்டுமொத்தமாக 17 சுற்றுகள் முடிவில் பின்லாந்து வீரர் ரெய்க்கோனன் 110 புள்ளிகள் பெற்று `பார்முலா1′ பட்டத்தை கைப்பற்றினார். அவர் பெராரி அணியை சேர்ந்தவர். லீவிஸ்ஹாமில்டன் 109 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், அலோன்சா 109 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். பெராரி அணி 204 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. பி.எம். டபிள்ï சவ்பேர் 101 புள்ளிகளும், ரெனால்ட் அணி 51 புள்ளிகளும் பெற்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாமி த்ரிஷாவும், மஞ்சக்கிழங்கு ஸ்ரேயாவும்! -75 பிரிண்ட் போட்ட தயாரிப்பாளர்
Next post நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்கு தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நிதி ஒதுக்கீடு