திருமண தொழிற்சாலை தொடங்கிய நடிகை…!!

Read Time:1 Minute, 48 Second

tapsi2தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது என்றாலும் பட வாய்ப்புகள் ஏதும் சரியாக அமையவில்லை. இதனால் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார்.

பின்னர் அஜித் நடித்த ஆரம்பம் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது இவரது நடிப்பில் வெளியான ‘காஞ்சனா 2’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. மேலும் சிம்புக்கு ஜோடியாக ஒரு படமும், ஜெய்க்கு ஜோடியாக ஒரு படமும் டாப்சி கைவசம் உள்ளது.

தற்போது டாப்சி புது முயற்சியாக திருமண தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். இவரும் இவருடைய தங்கை மற்றும் சில தோழிகளுடன் இணைந்து வெட்டிங் பேக்டரி என்னும் திருமணத்தை நடத்தித் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் திருமணத்திற்கு தேவையான மணமக்கள் அலங்காரம் முதல் அவர்கள் தேனிலவு செல்லும் வரை அனைத்து ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள்.

தற்போது உள்ள இளம் நாயகிகள் சினிமாவை தவிர பிற தொழில்களை தொடங்க அதிகம் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். சமீபத்தில் தமன்னா ஜூவல்லரி பிசினஸ் ஒன்றை தொடங்கினார். அந்த வரிசையில் தற்போது டாப்சியும் இணைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சியாக நடிப்பேன்…!!
Next post நயன்தாரா விக்னேஷ் திடீர் திருமணத்தால் பரபரப்பு!!