எமனும் நானே… டிராபிக் போலீசும் நானே: விசித்திரமான போக்குவரத்து காவலர்!!

Read Time:1 Minute, 53 Second

8ae53732-eab6-4e8a-a858-e0395ad4fd06_S_secvpf“டிராபிக் போலீசை மதிக்காம ஸ்பீடா போனா எமன்கிட்ட போய்டுவோம்னு சொல்வாங்க… ஆனா, அந்த எமனே டிராபிக் போலீசா இருந்தா???…” இது விசித்திரமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் நம்புங்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் சாட்சாத் அந்த எமதர்மராஜனேதான் டிராபிக் போலீஸ்.

“போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்றால் என்னிடம்தான் வருவீர்கள்” என்று விதிகளை மீறுபவர்களிடம் எமன் வேடமிட்ட இந்த டிராபிக் கான்ஸ்டபிள் கண்டிப்புடன் சொல்வதற்கு பொதுமக்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ். எமனின் பேச்சைக் கேட்டு ராஞ்சியில் நிறைய பேர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர். இருந்தாலும் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரம் பேரிடம் அபராதம் வசூலித்துள்ளதாக வருத்தத்துடன் சொல்கிறார் எமதர்மராஜன்.

“முதலில் காந்தியைத்தான் போக்குவரத்து பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினோம். பூங்கொத்துகள் கொடுத்து அன்புடன் போக்குவரத்து விதிகளை மீறாதீர்கள் என்று சொன்னபோது ஒருவரும் கேட்கவில்லை. ஆனால் இப்போதோ எமனைப் பார்த்து பயந்து நடுங்கி சாலை விதிகளை மதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்கிறார் போக்குவரத்து துணை பொறுப்பாளர் ஆனந்த்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழப்பாடியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!
Next post அமெரிக்காவில் படிக்க மும்பை மாணவிக்கு 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை: இன்னொரு ஆசையும் நிறைவேறுமா?