திருமணமாகி 4 வருடமாகியும் கழிவறை கட்டித்தராத கணவனை பிரிந்த மனைவி!!

Read Time:2 Minute, 14 Second

dfd13e9e-50f8-4b14-be0e-368b78dc78e4_S_secvpfஇயற்கை உபாதைகளுக்காக இருட்டில் ஒதுங்கும் பெண்களின் துயரம் இருளைப் போலவே பயங்கரமானது. 4 வருடங்களாக தினம் தினம் அந்த பயங்கரத்தை அனுபவித்த பெண் ஒருவர் தற்போது வேறு வழியின்றி தனது கணவனிடம் இருந்து பிரிந்துள்ளார்.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள பகர்பூர்-பிஷன்பூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த தம்பதியர்கள் தீரஜ் சவித்ரி-சுனிதா தேவி. 2011-ம் ஆண்டு திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த நாள் முதலே, ‘வீட்டில் கழிவறை கட்ட வேண்டும்’ என்று தனது கணவரிடம் கெஞ்சலோடு கேட்டுக்கொண்டார். ‘அதற்கென்ன கட்டி விடுவோம்’ என்று கூறிய தீரஜ் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்தபடியே இருந்தார். இதனால் வெறுத்துப்போன அவர் கணவனை விட்டு பிரிந்துள்ளார்.

இதுபற்றி சுனிதா கூறுகையில், “ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும், நான் பல துயரங்களையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறேன். நான் பிரிவதைத் தவிர என்ன செய்ய முடியும்?” என்றார்.

“சமீபத்தில்தான் என் அப்பா இறந்தார். கையில் பணமிருந்தால் நான் கழிவறை கட்ட மாட்டேனா?” என்கிறார் தீரஜ்.

மத்திய அரசின் நிர்மல் பாரத் அபியான் திட்டப்படி கழிவறை கட்ட 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அந்த பணத்தைக்கூட புரட்ட முடியாத தீரஜ் கழிவறை பிரச்சனையால் தனது திருமண வாழ்வையே இழந்துள்ளார்.

ஜார்க்கண்ட்டில் 92 சதவீத கிராமப்புற குடியிருப்புகளில் கழிவறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் நிலையத்தில் தகராறு: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் பலி!!
Next post குடும்ப நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்யலாம்: சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!!