இந்தியா-ரஷ்யாவுக்கு அண்டை நாடுகளால் பயங்கரவாத அச்சுறுத்தல்: பிரணாப் முகர்ஜி பேச்சு!!

Read Time:1 Minute, 59 Second

7187b5b9-8554-4fd4-b7f0-aac25e92af9e_S_secvpfஅண்டை நாடுகளில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதங்கள் இந்தியா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

ரஷ்யாவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரஷியா சென்றுள்ளார். மாஸ்கோவில் இன்று அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

அண்டை நாடுகளில் இருந்து வெளிப்படும் பயங்கரவாத அச்சுறுத்தலை இந்தியாவும், ரஷியாவும் சந்தித்து வருகின்றன. இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் இது பொது பிரச்சினையாக உள்ளது. இதற்கு இரு நாடுகள் மட்டும் தீர்வு காண முடியாது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஆவதற்கு ரஷியா தொடர்ந்து ஆதரவு அளிப்பது பாராட்டுக்குரியது. இந்திய வரலாற்றில் கடினமான தருணங்களில் ரஷியா தூண்போல நின்று உறுதுணையாக இருந்து வருகிறது. இந்திய நாட்டின் மிக சிறந்த நண்பராக ரஷிய அதிபர் புதின் உள்ளார். இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு 117 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்!!
Next post கேரள காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமிக்கு விவசாயியுடன் நாளை திருமணம்!!