கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் மகள்கள் சந்திப்பு!!

Read Time:1 Minute, 43 Second

f7bd4ff2-423c-4029-a94f-74f3ad79d4d8_S_secvpfகோவை கருமத்தம்பட்டியில் பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்த தென்னிந்திய மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் தலைவர் ரூபேஷ், அவரது மனைவி சைனா மற்றும் 3 பேரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் தமிழக, ஆந்திர ‘கியூ’ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூபேசை சந்திப்பதற்காக அவரது மகள்களான ஆமி(வயது 18), தாஜூ(14) ஆகியோர் இன்று காலை 11 மணி அளவில் கோவை மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் பெற்றோரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து 10 நிமிடம் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டது.

அப்போது சிறை அதிகாரிகளிடம் எனது தந்தையை போட்டோ எடுக்க வேண்டும். எனவே கேமிரா கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர்.

அதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். பின்னர் கேமிரா மற்றும் அவர்கள் கொண்டு வந்த செல்போனை வாங்கி வைத்துக்கொண்டனர்.

அதன் பின்னர் ஆமியும், தாஜுவும் சிறைக்கு சென்று பெற்றோரை சந்தித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளர்ப்பு மகளுக்கு 3 மாதமாக செக்ஸ் டார்ச்சர்: தொழிலாளி கொலையில் கைதான உறவினர் வாக்குமூலம்!!
Next post கொக்கு சுடவா ஆயுதம் எடுத்தீர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)!!