திருமணமான 3 நாளில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்: காதலனை மணந்து போலீசில் தஞ்சம்!!

Read Time:3 Minute, 22 Second

7cad175d-94e8-4ca6-90e4-17db3d53ea35_S_secvpfஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற வாலிபருக்கும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரவாபிரமிளா (வயது 20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

திருமணமான 3–வது நாளில் தனது புது மனைவியை சிவகுமார் அழைத்து கொண்டு கோபியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு சென்றார்.

அங்கு தனக்கும் தனது மனைவிக்கும் புதிய ஜவுளிகளை வாங்கினார். பிறகு ஜவுளி துணிகளுக்கு பணத்தை கட்டி கொண்டு வந்த போது அருகே நின்று கொண்டிருந்த மனைவியை காணவில்லை. சிவக்குமார் அங்கும் இங்கும் ஓடி சென்று பார்த்தார். எங்கும் மனைவி ரவா பிரமிளாவை காணவில்லை. அவர் திடீரென மாயமாகி விட்டார்.

திருமணமான 3–வது நாளில் புதுப்பெண் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிவக்குமார் கோபி போலீசில் புகார் செய்தார். புகாரில் திருமணமாகி 3 நாளில் என் மனைவியை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும் படி கேட்டுக்கொண்டார். கோபி இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

மேலும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சின்னராஜ் தலைமையில் மாயமான புதுப்பெண்ணை கண்டுபிடிக்க தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று மாயமான புதுப்பெண்ணை தேடி வந்தனர். மேலும் அவர்கள் ஆந்திரா மாநிலத்துக்கும் சென்று தேடினர்.

இந்தநிலையில் ஓட்டம் பிடித்த புதுப்பெண் தனது காதலனை திருமணம் செய்து கொண்டு விஜயவாடா பகுதியில் டூடவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

திருமணம் நடப்பதற்கு முன்பே ரவா பிரமிளா விஜயவாடா பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் கோபியை சேர்ந்த சிவகுமார் எனபவருக்கு ரவாபிரமிளாவை திருமணம் செய்து வைத்து விட்டனர்.

ஆனால் திருமணமான 3–வது நாளில் கணவனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ஓட்டம் பிடித்த ரவா பிரமிளா விஜயவாடாவுக்கு தனியாக சென்று அங்கு தான் காதலித்து வந்த வெங்கடேசனை மணந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இது குறித்து விஜயவாடா போலீசார் கோபி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கோபி போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்துக்காக அடகு கடை அதிபர்–மனைவியை கூலிப்படையை ஏவி கொன்ற உறவினர்கள் 5 பேர் கைது!!
Next post மனைவியை தற்கொலைக்கு தூண்டிய டெல்லி ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் 16-ம் தேதி வரை நீட்டிப்பு!!