இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்க செக்கோஸ்லவாக்கியா முன்வந்துள்ளது

Read Time:2 Minute, 49 Second

ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினருக்கான நவீன ராடர் கருவிகள் மற்றும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை வழங்குவதற்கான அத்தியாவசிய ஏற்பாடுகளுக்காகச் செக்கோஸ்லவாக்கியா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் எதிர்வரும் 2008 ஜனவரி மாதப் பகுதியில் சிறிலங்காவுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து சிறிலங்கா அரச படையினருக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் நவீன ராடர் உபகரணங்கள் உட்பட யுத்த உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களையும் செக்கோஸ்லவாக்கிய அரசு வழங்கும். இவ்வாறு யுத்த உபகரணங்கள் ஆயுதங்கள் வழங்குவதற்கான சம்மதத்தை ஏற்கனவே செக்கோஸ்லவாக்கிய அரசு இந்தியாவின் தலைநகர் புதுடில்லியிலுள்ள செக்கோஸ்லவாக்கிய தூதுவர் ட்ரைநெக் கொமோமிக் மூலமாகத் தெரிவித்துள்ளது. செக்கோஸ்லவாக்கிய அரசின் சிறிலங்காவுக்கான தூதரகச் செயற்பாடுகள் இந்தியத் தலைநகர் புதுடில்லியிலுள்ள செக்கோஸ்லவாக்கிய தூதரக அலுவலகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறிலங்காவுக்கு குறித்த நவீன ராடர் உட்பட யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் புதுடில்லியிலுள்ள மேற்படி செக்கோஸ்லவாக்கிய தூதர் கொமோமிக் அண்மையில் சிறிலங்காவுக்கு வந்திருந்தார்.இவர் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து மேற்படி யுத்த ஆயுத உபகரணங்கள் வழங்குவது பற்றி நடத்திய பேச்சுவார்த்தையின்போது சிறிலங்கா அரச படையினருக்கு செக்கோஸ்லவாக்கிய அரசு மேற்படி ஆயுத உபகரணங்களை வழங்கும் என்று ஜனாதிபதியிடம் சம்மதம் தெரிவித்திருந்தார். இவ்வாறு தூதுவர் மூலம் செக்கோஸ்லவாக்கிய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்தே செக்கோஸ்லவாக்கிய வெளிநாட்டமைச்சர் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முஷரப் வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும்; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
Next post கண் பார்வையிழந்த தொழிலாளிக்கு 10 வருடங்களின் பின் நஷ்டஈடு: மலேசியாவில் சம்பவம்