புத்தகத்திற்குள் துளை போட்டு செல் பதுக்கிய மாணவி
பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் புத்தகத்திற்குள் செல்போனை பதுக்கி வைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் செல்போன் தடை உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தீவிர சோதனை நடத்த ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் படு புத்திசாலித்தனமாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது புத்தகத்திற்குள் பெரிய துளை போட்டு அதில் செல்போனை பதுக்கி கொண்டு வந்துள்ளார். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு அதில் புதைந்திருந்த செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தார். அந்த ஒரு மாணவி மட்டும் நீண்ட நேரமாக தலையைக் குணிந்தபடி இருந்ததால் சந்தேகமடைந்த ஆசிரியர் அந்த மாணவியிடம் வந்து புத்தகத்தை வாங்கி புரட்டிப் பார்த்தார். அப்போது புத்தகத்திற்குள் செல்போன் ஒன்று அழகாக புதைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தின் தாள்களை செல்போன் சைசுகுக்கு வெட்டி, சிறிய அறை போல அமைத்து அதற்குள் அந்த செல்போனை வைத்திருந்தார் அந்த கில்லாடி மாணவி. அந்த மாணவி தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப்பட்டார். இனிமேல் இதுபோல செய்ய மாட்டேன் என்று அந்த மாணவி அழுது ஆர்பாட்டம் செய்ததால் வெறும் எச்சரிக்கையோடு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...