குவைத்தில் பெண்களைப் பொலிஸில் சேர்க்க முடிவு

Read Time:1 Minute, 13 Second

kuwaitc.gifகுவைத் நாட்டில் பொலிஸ் பணியில் பெண்களை அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை பொலிஸ் பணியில் அமர்த்துவது வளர்ந்த நாடுகளில் சாதாரணமாக நடந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளிலும் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் பெண்களை பொலிஸ் பணியில் அமர்த்துவது மிக அரிதாகவே இருந்தது. பொலிஸ் பணியில் பெண்களை அமர்த்துவது என்ற எண்ணம் இப்போது தான் ஏற்பட்டுள்ளது. குவைத் நாட்டு பொலிஸில் பெண்கள் அடுத்த ஆண்டு பணியமர்த்தப்படுகின்றனர். இதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. இதை பாத்வா கமிட்டியும் அனுமதித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண்களே இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் சேர்வதற்கான வயது எல்லை 30 முதல் 60 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாக். திரும்பினார் பெனாசிர்-ஆயிரக்கணக்கானோர் வரவேற்பு
Next post பாகிஸ்தான் பயங்கர குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பெனாசிர் : பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு