இந்தியாவில், ஆண்டுக்கு 1.2 லட்சம் பேர் தற்கொலை மனநிலை பாதிப்பு காரணம்
இந்தியாவில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர், தற்கொலை செய்து கொள்கின்றனர். மனநிலை பாதிப்பு தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சகம் இறங்கியுள்ளது. தற்கொலை முயற்சியில் இறங்குவோர் எண்ணிக்கை, ஆண்டுக்கு நான்கு லட்சம். இவர்களின் இந்த முடிவுக்கு காரணம், மன அழுத்தமும், மனநிலை பாதிப்பும் தான். கடந்த 2000ம் ஆண்டில், உலகில், தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சம். ஒரு லட்சம் பேரில், சராசரியாக 16 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒவ்வொரு 40 நொடியிலும், ஒரு தற்கொலை நடக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில், தற்கொலை எண்ணிக்கை, இந்தியாவில் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் மரணம் அடைய முக்கிய மூன்று காரணங்களில் தற்கொலையும் ஒன்று. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இளம் தலைமுறையினர் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக உள்ளது. இளைய தலைமுறையினரிடம் அதிகமாக உள்ள மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில், 8 சதவீதம் பேருக்கு மன நிலை பாதிப்பு ஏற் பட்டுள்ளது. இவர்களுக்கு போதிய அளவில், ஆலோசனை கூறவும், தீர்வு காணவும், போதுமான அளவில், மனோதத்துவ டாக்டர்கள் இல்லை. மொத்தம் 3,300 மனோதத்துவ டாக்டர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். இவர்களில், மூன்றாயிரம் பேர், சென்னை உட்பட நான்கு பெரு நகரங்களில் உள்ளனர். மாவட்டங்களில் மனோதத்துவ டாக்டர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். இந்தியாவுக்கு 32 ஆயிரம் மனோதத்துவ டாக்டர்கள் தேவை. இது குறித்து மத்திய சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “ஒன்பது லட்சம் பெண்களுக்கு, மனோதத்துவ அடிப்படையில் சிகிச்சை தேவைப்படுகிறது. இவர்களில், 10 முதல் 29 வயதிலான பெண்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 80 ஆயிரம். 30 வயதில் இருந்து 50 வரை உள்ளவர்கள் எண்ணிக்கை இரண்டரை லட்சம்’ என்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...