நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை!!

Read Time:2 Minute, 50 Second

d0d540d5-a610-46c2-8559-6b13548b1cf2_S_secvpfநேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேபாள மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் நான் அவர்களுடன் இங்கிருப்பதையே விரும்புகிறேன் என பாபா ரம்தேவ் தெரிவித்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார்.

நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை சென்றுள்ள சில இந்தியர்களின் உறவினர்களும் சுஷ்மாவுடன் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு நேபாளம் சென்றுள்ள தங்களது உறவினர்களின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை தெரியப்படுத்தி, அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துவர உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

அவர்களுக்கு ஆறுதலாக பதில் அளித்து வரும் சுஷ்மா சுவராஜ், இதுபற்றிய தகவல்களை உடனுக்குடன் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்தி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். இன்று மட்டும் சுமார் 250 இந்தியர்களை நேபாளத்தில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக காத்மாண்டுவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுஷ்மா சுவராஜ் கேட்டு கொண்டுள்ளார்.

நேபாளத்தில் 5 நாள் தொடர் யோகாசன பயிற்சி முகாம் நடத்துவதற்காக அங்கு சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று நடத்திய முகாமில் சுமார் 25 ஆயிரம் பேர் யோகாசன பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையின் பிரபல போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவி பேபி கைது!!
Next post திருமணமான 2 ஆண்டுகளாக யுத்தக்களம்: கருப்புத்தோல் கணவன் தலையை சுத்தியலால் நசுக்கி கொன்ற இளம்பெண்!!