செம்மரம் கடத்தலில் நடிகைக்கு தொடர்பு: கைது செய்ய போலீஸ் தீவிரம்!!

Read Time:9 Minute, 9 Second

2286d0cf-e716-4d38-910d-3f055e1f10c8_S_secvpfதிருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்களை ஆந்திர அதிரடி போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் அவர்களை மரம் வெட்ட அனுப்பி வைத்த கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

மேலும் போலீஸ் என் கவுண்டரின்போது நெல்லூரில் 45 பேரும், அனந்தசாகர் பகுதியில் 18 பேரும் பிடிபட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்களை கூலிக்கு பேசி செம்மரம் வெட்ட அனுப்பிய கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்கள் தெரிய வந்தது.

திருப்பதி, சித்தூர், கடப்பா, நெல்லூர் ஆகிய பகுதிகளில் கடத்தல்காரர்கள் அதிகம் பேர் இருப்பதும் இவர்கள் மரம் வெட்டுவதில் திறமையான தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி கூலி ஆட்களை அழைத்து வருவதும் கண்டு பிடிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே அலமாதி ஜீவா நகரில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக முனியாண்டி என்பவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

அவரது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டபம் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குடிபாலா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

காரில் செம்மரக்கட்டைகள் இருந்தது. போலீசார் சோதனையிட்டு கொண்டு இருக்கும் போது காரில் இருந்த சரவணன், சுரேஷ், ஆனந்த், அரி உள்பட 6 பேர் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

கைதான சரவணன், சென்னையைச் சேர்ந்த நடிகர். இவரது தந்தை சந்திரன் தயாரிப்பில் ‘மன்னவரு’’ என்ற தமிழ் படத்தில் நடித்து உள்ளார். அந்த படம் வெளி வரவில்லை.

சென்னையில் உள்ள நடிகர் சரவணனின் 2 குடோன்களில் ஆந்திர போலீசார் சோதனை செய்ததில் அங்கிருந்து 165 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சரவணன் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய ரவி, சண்முகம் கைது செய்யப்பட்டனர். இவர்களின் குடோனில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்தான் வலி, அவரது சகோதரர் சங்கர்நாயக் ஆகியோர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மஸ்தான் வலியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் செம்மரக்கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் சினிமா படம் தயாரிப்பில் ஈடுபட்டதும், அவரது படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நீத்து அகர்வாலை காதலியாக வைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தியதும் தெரிய வந்தது.

மஸ்தான் வலி தெலுங்கில் ‘பிரேம பிரயாணம்’ என்ற படம் தயாரித்தார். அதில் நீத்து அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மஸ்தான்வலியிடம் மேலும் விசாரித்தபோது செம்மரக்கடத்தலில் நடிகை நீத்துவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மஸ்தான் வலி செம்மரக்கடத்தலில் கிடைத்த பணத்தை நடிகை நீத்துவிடம் கொடுத்து அவரது வங்கி கணக்கில் போட்டுள்ளார். பின்னர் வங்கி கணக்கில் இருந்து தனக்கு தேவைப்படும் போது தேவையான பணத்தை எடுத்து இருக்கிறார்.

இதையடுத்து போலீசார் மஸ்தான்வலி, நடிகை நீத்து அகர்வால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மஸ்தான்வலி கைது செய்யப்பட்டார். போலீசார் நடிகை நீத்துவை கைது செய்யச் சென்றபோது தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

அவர் பெங்களூர் அல்லது மும்பையில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரை கைது செய்ய தனிப்படைகள் மும்பை, பெங்களூர் விரைந்துள்ளது.

நடிகை நீத்துக்கு மஸ்தான்வலி ரூ.35 லட்சம் மதிப்புள்ள பங்களா கட்டி கொடுத்துள்ளார். அதில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தனர்.

மஸ்தான்வலி சாதாரண எலுமிச்சை வியாபாரியாக இருந்தார். வியாபாரம் தொடர்பாக கடந்த 2013–ம் ஆண்டு திருப்பதி வந்த போது செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் சேர்ந்து செம்மர கடத்தலில் ஈடுபட தொடங்கினார். இதில் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார். அந்தப் பணத்தில்தான் சினிமா படம் எடுத்துள்ளார்.

சினிமா தவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். அவரால் வெற்றி பெற முடியவில்லை. என்றாலும் அந்த கட்சியில் கோடிக்கணக்கில் செலவழித்து பல முக்கிய பொறுப்புகளை கைப்பற்றினார். 2014–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

கடந்த 13–ந்தேதியே ருத்ராவரம் போலீசார் மஸ்தான் வலியை கைது செய்தனர். ஆனால் மறுநாளே மஸ்தானை கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. தொடர்ந்து நடிகை நீத்து தேடப்பட்டு வருகிறார். அவரது வங்கி கணக்கை சோதனையிட்டபோது அதில் இருந்து கடத்தல்காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து நடிகையின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

இதற்கிடையே செம்மர கடத்தல் விவகாரத்தில் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை தீவிரமாக கண்காணித்து வந்த ஆந்திர போலீசார் அவருக்கு சொந்தமான தொழிற்பேட்டையில் உள்ள குடோனில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அதில் 5 டன் ஏ கிரேடு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கைதான நடிகர் சரவணன், குமார் உள்பட 3 பேரையும் ஆந்திர போலீசார் சித்தூர் எஸ்.பி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் தமிழக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் செம்மர கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

திருப்பதி மலையில் என்கவுண்டர் மூலம் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு கடந்த 17 நாட்களில் 74 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.15.35 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார தந்தை கைது!!
Next post மஸரத் ஆலம் மீது அதிரடி வழக்கு பாய்ந்தது: விசாரணை இல்லாமலேயே 2 வருட சிறை தண்டனை!!