காதல் விளையாட்டுக்காக மாணவர்களை கடத்தும் ஆசிரியைகள்: மகன்களை நினைத்து பெற்றோர் கலக்கம்!!
பெண் பிள்ளையை பெற்றவர்கள்தான் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு கணமும் தவித்துக் கொண்டிருப்பார்கள்.
பள்ளி, கல்லூரிக்கு சென்ற மகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை இந்த திக்…. திக்…. தொடரும்.
ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. வாட்ட சாட்டமான பையன் இருந்தால் அவனை பாதுகாப்பதுதான் பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாகி வருகிறது. ஆசிரியைகளே மாணவர்களை காதல் வலையில் வீழ்த்தி தள்ளிக் கொண்டு போய் விடுகிறார்கள். தமிழகத்தில் அதிகரித்து வரும் இந்த கலாச்சாரம் புனிதமான ஆசிரியை பணிக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
வாலிப வயதில் மாணவர்கள் கொஞ்சம் அப்படி இப்படிதான் அலைவார்கள். சினிமாக்களில் வரும் சிகை அலங்காரம் முதல் அத்தனை ஸ்டைல்களையும் அப்படியே காப்பியடித்து விடுவார்கள்.
ரோமியோக்களாக வரும் இவர்களை பார்த்து மாணவிகளான ஜூலியட்டுகள் மயங்குவதால் தடம் மாறி விடுவதுண்டு. அவர்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டு கட்டுப்படுத்தும் பணியை தான் ஆசிரியர்கள் செய்து வந்தார்கள்.
ஆனால் இப்போது…. கெட்–அப்பிலும், மேக் அப்பிலும் மாணவிகளை மிஞ்சி வருகிறார்கள் ஆசிரியைகள். பொதுவாக ஆசிரியைகள் பார்க்கும் பார்வையிலேயே மாணவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிய காலம் ஒன்று இருந்தது.
ஆனால் இன்று ஆசிரியைகள் வீசும் காதல் பாணம் உணர்ச்சி கொந்தளிப்பில் மாணவர்களை கிளர்ந்து எழுந்து ஆட வைக்கிறது.
கல்லுக்கு சேலை கட்டினால் கூட காதல் வயப்படும் மாணவ பருவம் அது. இலவசமாய் காதல் பாடம் நடத்த ஆசிரியையே முன்வந்தால் மாணவன் புகுந்து விளையாடத்தானே செய்வான்.
நெல்லை கோதைலட்சுமியை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். செங்கோட்டை காலாங்கரையைச் சேர்ந்த இவர் 23 வயது இளமங்கை. இளம் வயதிலேயே தென்காசியில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது.
வயதுக்கேற்ற வசீகரத்துடனும் மிடுக்குடனும் நடைபோட்ட கோதைலட்சுமி ஆசிரியை ஸ்தானத்தை மறந்து போனார்.
முறுக்கேறிய வாலிப வயதில் காலரை தூக்கி விட்டு கொண்டு அலைந்த 15 வயதே நிரம்பிய மாணவன் சிவசுப்பிரமணியனை பார்த்ததும் வளைத்து போட்டார்.
அதற்காக அவர் விரித்த வலையில் தேன் சுவைத்த வண்டாய் வீழ்ந்தான் சிவசுப்பிரமணியன். ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையே நடந்த ‘செக்ஸ்’ விளையாட்டு தெரிய வந்ததும் பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட மாணவன் டியூசன் படிக்கும் போர்வையில் கோதைலட்சுமி வீட்டுக்கே சென்று காதல் விளையாட்டை கச்சிதமாக ஆடினான்.
மாணவ காதலனின் காதல் விளையாட்டில் மயங்கி திளைத்த கோதைலட்சுமி 10–ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் அவனை தள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
கும்மிடிப்பூண்டி, புதுச்சேரி என்று பல இடங்களில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கண்ணாமூச்சி ஆடி வரும் இந்த ஜோடியை பிடித்து மாணவனை கடத்தியதாக கோதைலட்சுமியை சிறைக்குள் தள்ள போலீஸ் தேடி அலைகிறது.
ஒரு டீச்சர் அல்ல இன்னும் பல டீச்சர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது போல திண்டுக்கல் ஆசிரியை செபாஸ்டின் சாரதியும் மாணவனை கூட்டிச் சென்று விட்டார்.
திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்தவர் செபாஸ்டின் சாரதி.
21 வயதான இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு டூட்டோரியலில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
முள்ளிப்பாடியைச் சேர்ந்த சதீஸ்குமார் (18) பிளஸ்–2 தேர்வில் தமிழை தவிர அத்தனை பாடங்களும் பெயிலாகி அந்த டூட்டோரியலில் சேர்ந்து படித்தார்.
பாடம் தொடர்பாக சதீஸ்குமார் ஆசிரியை செபாஸ்டின் சாரதியிடம் அடிக்கடி சந்தேகம் கேட்டு வந்தார். மாலையில் வகுப்பு முடிந்த பின்னரும் சந்தித்து விளக்கம் கேட்பார். அப்போது ஆசிரியை–மாணவர் உறவு மறைந்தது. காதலர்களாக மாறினர். வேண்டா வெறுப்புடன் பாடம் படிக்க வந்து கொண்டு இருந்த சதீஸ்குமார் அதன் பின்னர் ஆர்வத்துடன் டூட்டோரியல் வர தொடங்கினார். வகுப்பறையிலேயே இருவரும் கண்களால் காதல் பாடம் படித்தனர்.
பள்ளி முடிந்து மாலையில் வெளியே சென்று தனிமையில் காதல் பாடம் நடத்தினார்கள்.
செபஸ்டினும், சதீஸ்குமாரும் மெய் மறந்து அலைந்ததை பார்த்தவர்கள் சதீஸ்குமார் பெற்றோரின் காதில் போட்டனர்.
நிலைமையை உணர்ந்த செபஸ்டின் குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள். அதை அறிந்ததும் செபஸ்டின் தன் அன்பு காதல் மாணவரை அழைத்து கொண்டு ஓடி விட்டார்.
திண்டுக்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் தேடி கொடைக்கானல் சென்றுள்ளனர்.
பத்து முதல் 15 வயது வரை வித்தியாசம் இருந்தும் மாணவர்களை தங்கள் ‘செக்ஸ்’ ஆசைக்காக பயன்படுத்திக் கொள்ளும் இந்த மாதிரி ஆசிரியைகளின் செயலுக்கு ‘காதல்’ என்ற புனிதமான வார்த்தையை பயன்படுத்தவது சரியாக இருக்காது.
முறை தவறி புனிதமான ஆசிரியர் – மாணவர் உறவையும் கொச்சைப்படுத்தி சமூக சீரழிவுக்கு வழி வகுக்கும் இவர்களுக்கு சட்டம் மூலம் பாடம் நடத்த போலீஸ் தயாராகி வருகிறது.
ஆண்களுக்கு திருமண வயது 21. பெண்களுக்கு திருமண வயது 18 என்பதுதான் சட்டம். அதை மீறி திருமண வயதை எட்டாத வாலிபர்களை மயக்கிய கோதைலட்சுமி மீதும், செபஸ்டின் சாரதி மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
செபஸ்டின் சாரதி – சதீஸ்குமார், கோதைலட்சுமி – சிவசுப்பிரமணியன் ஆகியோரது காதல் செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலமே வளர்ந்துள்ளது.
இந்த இரு ஜோடிகளின் செல்போன்களும் தற்போது சுவிட்ச் ஆப் ஆகி விட்டன. எனவே காதல் ஜோடிகளின் மறைவிடத்தை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார்கள்… ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள்! விரைவில் எங்களிடம் சிக்குவார்கள் என்று வலைவிரித்து காத்திருக்கிறது போலீஸ்.
Average Rating