நின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு குற்றவாளியாக சிறையில் இருக்கும் வாலிபனின் விதைப்பை நீக்கம்!!
வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கிரேட் மேன்செஸ்டர் நகரை சேர்ந்தவன் பால் கேட்டரால்(24). பலவகை கொடிய போதைப் பழக்கங்களுக்கு அடிமையான இவன், போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும் வேளைகளில் தனியாக செல்லும் பெண்களை பலவந்தப்படுத்தி, பாலியல் பலாதகாரம் செய்து, கற்பழித்து தனது வெறியை தணித்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தான்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள பால்டன் நகரில் இருக்கும் ஒரு இரவு விடுதியில் கொக்கைன் போதைப் பொருளை ஏற்றிக்கொண்டு, மூக்குமுட்ட குடித்தும்விட்டு வெளியே வந்த பாலின் கண்களில் ஒரு அழகான 18 வயது இளம்பெண் சிக்கினாள். மெதுவாக பின்தொடர்ந்து சென்ற பால் கேட்டரால், தனிமையான ஒரு பகுதியில் அவளை முத்தமிட முனைந்தான்.
அவனது பிடியில் இருந்து தப்பியோடிய அந்தப் பெண்ணின் தலைமுடியை பிடித்து, இழுத்து முரட்டுத்தனமாக அவளை முத்தமிட்டு மகிழ்ந்தான். அவள் நிலைதடுமாறி கீழே விழுந்ததும் பலவந்தப்படுத்தி தனது இச்சையை தீர்த்துக் கொள்ள முயற்சித்தான். உடைகள் கிழிந்த நிலையில் அவனிடம் இருந்து விடுபட்டு, ஆல் செய்ண்ட்ஸ் தெரு வழியாக ஓடியவளை விடாமல் துரத்தி சென்றான். ஆனால், அவனிடம் பிடிபடாமல் அந்தப் பெண் தப்பியோடி விட்டாள்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பால் கேட்டராலை தேடிப் பிடித்து கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இப்படி பல பெண்களை அவன் பதம் பார்த்திருப்பதும், 2009-ம் ஆண்டில் ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலையானதும் தெரியவந்தது.
கடந்த ஜூலை மாதம் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக பால்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். அப்போது, நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகள் சமர்ப்பித்த பால் கேட்டராலின் மருத்துவ ஆவணங்களை பார்த்த நீதிபதி திடுக்கிட்டார்.
இவ்வழக்கின் விசாரணை காலத்தில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, பால் கேட்டராவின் விதைகளில் தாக்கி இருந்த புற்றுநோயின் பாதிப்பில் இருந்து அவனது உயிரைக் காப்பாற்ற அவனது விதைப்பை ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தான், ‘அரசு நின்று கொல்லும்-தெய்வம் நின்று கொல்லும்’ என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால், பால் கேட்டரால் விஷயத்தில் இந்த முதுமொழி சற்று மாறிவிட்டது. அரசின் நீதிமன்றம் 7 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை அளிப்பதற்கு முன்னதாகவே நீதிதேவனாம், தெய்வத்தின் பெருமன்றம் காமுகனான பால் கேட்டரால் இனி ஆயுள் முழுவதும் ஆண்மையை தொலைத்தவனாகவே வாழும் மாபெரும் தீர்ப்பை அளித்து விட்டது.
Average Rating