சிறை செல்வாரா சல்மான்? நாளை தெரியும்!!

Read Time:1 Minute, 27 Second

Untitled-116மும்பையில் சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது காரை ஏற்றி ஒருவரைக் கொன்றதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் (49) மீது தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு திகதி திங்கள்கிழமை (ஏப்.20) அறிவிக்கப்படும் என்று விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் திகதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது சல்மான் கான் காரை ஏற்றியதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி தேஷ்பாண்டே கூறுகையில், “சல்மான் கானின் வழக்குரைஞர் தனது இறுதி வாதத்தை திங்கள்கிழமை நிறைவு செய்ய வேண்டும். அதற்குமேல் கால நீட்டிப்பு வழங்க முடியாது.
தீர்ப்பு திகதி திங்கள்கிழமை அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்…!!
Next post அரசு எங்களை கைது செய்ய நினைத்தால், தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்- பிள்ளையான் (பேட்டி)!!