மிட்டாய் தர மறுத்ததால் சிறுவனின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவர்கள்!!

Read Time:1 Minute, 37 Second

0cee81ce-dbec-4fe6-87fa-a45478b738f5_S_secvpfதிண்டுக்கல் அருகில் உள்ள சீத்தபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முத்தப்பன் (வயது11) என்ற 3–வது மகன் தென்னம்பட்டி அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மதியம் முழு ஆண்டுத்தேர்வு முடிந்து சக மாணவர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கினான்.

சக மாணவர்கள் சிலர் முத்தப்பனிடம் மிட்டாய் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவன் மறுக்கவே ஆத்திரம் அடைந்த 4 மாணவர்கள் அவனை சரமாரியாக தாக்கினர். அவர்கள் அடிக்கு பயந்து மாணவன் ஓடவே விரட்டி பிடித்த 4 மாணவர்களும் தங்களிடம் இருந்த பிளேடால் முத்தப்பனின் கழுத்தை அறுத்தனர்.

இதில் அவன் மயங்கி விழுந்தான். அப்பகுதி பொதுமக்கள் மாணவனை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி ஆண்டு விழாவுக்கு பணம் தராததால் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியை: போலீசில் புகார்!!
Next post புதுவையில் கள்ளக்காதலியின் 3 வயது மகளை கற்பழித்த பஸ் டிரைவர்: கால்களை உடைத்து சித்ரவதை!!