பள்ளி ஆண்டு விழாவுக்கு பணம் தராததால் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியை: போலீசில் புகார்!!

Read Time:1 Minute, 32 Second

0a15387f-0b2f-4ab1-9c78-9883e92c7feb_S_secvpf2காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் தர்ஷிணி (வயது 11). அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகள் காவியலட்சுமி (11).

தர்ஷிணியும், காவியலட்சுமியும் காரைக்கால் மேலக்காசாக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு மாணவிகள்.

இந்த பள்ளியின் ஆண்டு விழாவுக்கு மாணவிகள் ஒவ்வொருவரும் தலா ரூ. 1200 கொடுக்க வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த 2 மாணவிகளும் அந்த பணத்தை கொடுக்கவில்லை.

இதனால் கோபமடைந்த அந்த பள்ளியின் ஆசிரியை தங்களை பிரம்பால் தாக்கியதாக 2 மாணவிகளும் பெற்றோர்களிடம் அழுது கொண்டே கூறினர். அவர்கள் கையில் காயம் இருந்தது. எனவே 2 பேரும் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இது தொடர்பாக நெடுங்காடு போலீசில் ரவிக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் அந்த பள்ளியை சேர்ந்த அமுதவள்ளி என்ற ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விழுப்புரத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு வழி தவறி வந்த பள்ளி மாணவன்: ஆட்டோ டிரைவர் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தார்!!
Next post மிட்டாய் தர மறுத்ததால் சிறுவனின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவர்கள்!!