போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து இளம்பெண்ணை கற்பழித்த கும்பல்!!

Read Time:2 Minute, 25 Second

f469f21d-f04f-4104-9f75-6739ccff6e5d_S_secvpfபஞ்சாப் மாநிலத்தில் போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து 22 வயது பெண்ணை கற்பழித்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இங்குள்ள பதான்கோட் மாவட்டத்தை சேர்ந்த அந்தப் பெண் கடந்த 14-ம் தேதி இரவு தனது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவரான பர்தீப் குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்றார்.

வழியில் ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு அழைத்து சென்றபோது அங்கு பர்தீப் குமாருக்கு தெரிந்த இருவர் அமர்ந்திருந்தனர். அந்த கடையில் ஒரு ஐஸ் கிரீமை வாங்கிய அவர் அதை அந்தப் பெண்ணுக்கு தந்தார். அதில் ஏதோ போதைபொருள் கலந்திருப்பது தெரியாமல் ஐஸ் கிரீமை சாப்பிட்ட அந்தப் பெண் மயக்க நிலையை அடைந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து அந்தப் பெண்ணை பர்தீப் குமாரும் அவரது நண்பர்களும் ஒரு தனியிடத்திற்கு தூக்கிச் சென்றனர். மயங்கி கிடந்த அந்தப் பெண்ணை மூவரும் மாறி, மாறி கற்பழித்துவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண் சொந்த கிராமத்துக்கு திரும்பி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பர்தீப் குமாரை கைது செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது, உறுதியானது. தலைமறைவாக இருக்கும் பர்தீப் குமாரின் நண்பர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: வீடு புகுந்து குடும்பப் பெண்ணை கற்பழித்த போலீஸ்காரரின் வெறியாட்டம்!!
Next post உயிருடன் இருப்பதை விட இவன் செத்துப் போகலாம்: கழுத்து நிற்காத நோயால் அவதிப்படும் மகனின் பெற்றோர் வேதனை!!