வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: வீடு புகுந்து குடும்பப் பெண்ணை கற்பழித்த போலீஸ்காரரின் வெறியாட்டம்!!

Read Time:1 Minute, 40 Second

9d922d07-a424-45bc-bd55-9249439e8a41_S_secvpfமங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். ஆனால், கங்கையே சூதகமாகிப் போனால் என்ன செய்வது? என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. அதேபோல், காமுகர்கள் பெண்களை கற்பழித்தால் போலீசில் புகார் அளிக்கலாம். இத்தகைய காமுகர்களின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ்காரரே காமுகனாக மாறி வீடு புகுந்து ஒரு பெண்ணை கற்பழித்த கொடூரம் பஞ்சாப் மாநிலத்தில் நேற்றிரவு அரங்கேறியுள்ளது.

இங்குள்ள சிகார் மாவட்டத்தின் சடார் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பப் பிரச்சனை தொடர்பான ஒரு வழக்கில் உதவி செய்யுமாறு சடார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் உதவியை நாடியுள்ளார். அவருக்கு உதவி செய்யும் சாக்கில் நேற்றிரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த அந்த கான்ஸ்டபிள் அவரை பலவந்தப்படுத்தி, கதறக்கதற கற்பழித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் இன்று அளித்த புகாரையடுத்து, அந்த காமுகனிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிகார் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்!!
Next post போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து இளம்பெண்ணை கற்பழித்த கும்பல்!!