காஷ்மீர் போராட்டத்தில் வாலிபர் சுட்டுக் கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது!!

Read Time:2 Minute, 9 Second

2e5159b3-2cfe-4730-b224-c8ea35cea263_S_secvpfகாஷ்மீரில் இன்று நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானது தொடர்பாக, 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்தற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி அழைப்பு விடுத்திருந்தார். இதனால், இன்று மாநிலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

வாகன போக்குவரத்தும் முடங்கியது. ஜம்முவில் முழு அடைப்புக்கு ஓரளவே ஆதரவு இருந்தது. மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஸ்ரீநகரில் நேற்று பல இடங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பட்காம் மாவட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், சுஹைல் அஹமது சோபி என்ற வாலிபர் பலியானார்.

இதனையடுத்து, அங்கு போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

துப்பாக்கிச் சூட்டில் சுஹைல் அஹமது சோபி பலியானது குறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடத்தவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரட்டூரில் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: வியாபார சங்கம் ஏற்பாடு!!
Next post காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்!!