கொரட்டூரில் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: வியாபார சங்கம் ஏற்பாடு!!

Read Time:2 Minute, 1 Second

8c2a1ef1-6388-45d6-b229-c3b2838f4979_S_secvpfசென்னை கொரட்டூரில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. போலீசார் தீவிர ரோந்து பணியில் சுற்றினாலும் கொள்ளைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடைகளில் கொள்ளை நடைபெறாமல் தடுப்பது பற்றி வியாபாரிகளுடன் போலீசார் கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார்கள். கொரட்டூர் டி.எஸ்.திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத் தலைவர் கொரட்டூர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சரவணன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அப்போது சரவணன் கூறுகையில், கடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். கடையை பூட்டும் போது கடைக்குள் பணம் வைக்க கூடாது, காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றார்.

வியாபாரிகள் சார்பில் கொரட்டூர் ராமச்சந்திரன் பேசுகையில், கொரட்டூர் பஸ் நிலையம், கடை வீதியில் கொள்ளைகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதாக உறுதி அளித்தார். பஸ் நிலையத்தில் போலீஸ் ‘பூத்’ அமைத்து தருவதாகவும் கூறினார். கூட்டத்தில் வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் சங்கர், பொருளாளர் அருணாசல மூர்த்தி, கொரட்டூர் வியாபாரிகள் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் கோபால்ராஜ் பொருளாளர் நிர்மல்குமார் ஜெயின் உள்பட ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவல்லிக்கேணி லாட்ஜில் வாலிபர் தற்கொலை!!
Next post காஷ்மீர் போராட்டத்தில் வாலிபர் சுட்டுக் கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது!!