செங்கோட்டை மாணவன் மாயம்: போலீசில் சிக்காமல் இருக்க ஊர் ஊராக ஓடும் ஆசிரியை!!

Read Time:4 Minute, 39 Second

c44fff07-74e7-4e26-a33b-72767f5a9f41_S_secvpfநெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). இவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த மாதம் (மார்ச்) 31–ந்தேதி வீட்டை விட்டு சென்ற அவன் திடீர் என மாயமானான். இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மாணவனின் தாய் மாரியம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் சிவசுப்பிரமணியன் எங்கு சென்றான் என விசாரணை நடத்தினர்.

அதில் சிவசுப்பிரமணியன் அவன் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரை சங்கர சுப்பிரமணியன் தெருவைச்சேர்ந்த கேசரி மகள் கோதைலட்சுமி(23) என்பவருடன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. கோதைலட்சுமி மாயமானது குறித்து அவரது தந்தை செங்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

மாணவன் மாயமானது குறித்து கடையநல்லூர் போலீசாரும், ஆசிரியை மாயமானது குறித்து செங்கோட்டை போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவன் – ஆசிரியை இடையே காதல் மலர்ந்து இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவ சுப்பிரமணியனும், ஆசிரியை கோதைலட்சுமியும் கும்மிடிபூண்டிக்கு சென்றனர். பின்பு சென்னைக்கு சென்றுவிட்டனர். மாணவன் தனது தந்தையின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆசிரியை–மாணவனை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர்கள் இருவரும் புதுவைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. ஆசிரியை கோதைலட்சுமி புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை கேட்டு சென்றுள்ளார். அந்த பள்ளியும் அவருக்கு வேலை வழங்கி உள்ளது.

இதற்கிடையே ஆசிரியை கோதைலட்சுமியின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகின. ஆகவே அவர் அந்த பள்ளிக்கு வேலைக்கு செல்லவில்லை. இந்த தகவல் ஆசிரியை–மாணவனை தேடி வரும் தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் புதுவை விரைந்தனர்.

கோதைலட்சுமிக்கு பள்ளியில் வேலை கிடைத்ததால் அவர் மாணவனுடன் புதுவையில்தான் எங்காவது வீடு எடுத்து தங்கியிருக்க வேண்டும் என்று தனிப்படை போலீசார் கருதுகின்றனர். எனவே அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ஆசிரியையோ போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக மாணவனுடன் ஊர் ஊராக சுற்றி வருகிறார்.

மாணவனுக்கு யாரும் வேலை தரமாட்டார்கள் என்பதால், தான் வேலை பார்த்தால்தான் வாழ முடியும் என்று அவர் கருதுவதால் ஊர் ஊராக சென்று வேலை தேடி வருகிறார். ஆனால் அவரது படம் பத்திரிகைகளில் வெளியாகி விட்டதால் அவருக்கு எங்கும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே அவர் விரைவில் ஊருக்கு திரும்பிவிடுவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி ஆன்ட்ராய்ட் போனில் காதலிக்கு கைப்பட கடிதம் எழுதலாம்: கூகுள் புதிய வசதி!!
Next post கருப்பாக இருந்ததால் வெறுப்பு: கோவையில் மனைவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!