ஆடை அவிழ்க்கும் அனந்தியும், வெட்கித் தலைகுனியும் மக்களும்…!

Read Time:13 Minute, 11 Second

ananthi (8)
நான் எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் அனந்தி சசிதரன்.

எழிலன் என்ற புலிகளின் திருமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, மாவிலாறு தண்ணீரை மறித்து இறுதியுத்தத்தத்திற்கு வித்திட்ட சம்பவத்தை ஆரம்பித்து வைத்த நாயகனும், பின் முள்ளிவாய்க்காலில் எம் உறவுகள் பலரை பரலோகம் அனுப்பிய வாள்வீரனின் மனைவி தான் அவ்வாறு பத்திரிகையாளர் மாநாடு நடத்தி பகிரங்கபடுத்தியுள்ளார். 

மாகாணசபை தேர்தலில் காலத்தில் அக்காவை வெல்லவைக்க புலம்பெயர் புலி தம்பிகள் உண்டியலில் பணம் அனுப்ப புலிகளின் மஞ்சள் நிறத்தில் சிவப்பு கரை சேலைகட்டிய சிங்காரி மேடை ஏறி சன்னதமாடினார்.

கோவலன் கொலைக்கு கண்ணகி போராடியதில்அவளிடம் நியாயம் இருந்தது அதை அவள் கால்சிலம்பு நிரூபித்தது. ஆனால் எழிலன் நிலைமைக்கு யார் காரணம் என்பதை அறிந்தும் இந்த அடங்காபிடாரி ஆடிய கூத்தை வாய்பிளந்து பார்த்த வாக்களா பெருமக்கள் அள்ளிப்போட்ட (கள்ள வாக்குகள் உட்பட ) வாக்குகளால் அனந்தி மாகாண சபையின் ஆஸ்தான பெண் உறுப்பினர் ஆனார்.

இப்போ தான் எப்போதுமே புலிகள் அமைப்பில் இருக்கவில்லை, தான் உடுத்த மஞ்சள் நிற சிவப்பு கரை சேலை நான் வேசம் கட்டிய மாற்று சேலை என அவிழ்த்து வீசிவிட்டார்.

எழிலன் என்ற புலியுடன் கூடி குலவி குடும்பம் நடத்தியதால் மட்டுமே அவருக்கு வாக்களிக்க சொன்னவர்களும், வாக்களித்தவர்களும் புலிகளின் அடையாள சின்னமான சேலையை அவிழ்த்தெறிந்த அவரது அம்மண அரசியல் செயலை பார்த்து வெட்கித் தலைகுனிகின்றனர்.

அனந்தி அவர்களே ஒரு கண்ணியமான வேண்டுகோள் இன்று நீங்கள் என்றுமே புலி அமைப்பில் இருக்கவில்லை என கூறியதுபோல் நாளை சசிதரன் என்ற புலி எழிலன் எனது பிள்ளைகளுக்கு தகப்பன் இல்லை. அந்த சசிதரன் வேறு எழிலன் என்ற புலி அமைப்பு பெயர் கொண்ட சசிதரன் வேறு என கூறி அதை நிரூபிக்க டி.என்.ஏ ரெஸ்ற் வரை போவதாக சவால் விட்டு விடாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் நிலை கிழிஞ்சிது கிஷ்ணகிரி போலாகிவிடும்.

வட மாகாண சபை தேர்தலில் அனந்திக்கு வாக்களித்த வட்டுக்கோட்டை உட்பட்ட வாக்காளப் பெருமக்களே, சுட்டாலும் சங்கு வெண்மைதரும் என்ற உண்மை உங்களிகளிற்கு தெரியாதா?

எத்தனை இடர் வந்தாலும் துயர் துன்பங்கள் பெரும்சோதனை வந்தாலும் இன்றுவரை நெஞ்சுரத்துடன் சொந்த மண்ணில் நின்று நிலைத்து வாழும் உங்களை, புலம்பெயர் நாடுகளில் புகலிடம் தேடியவர் இங்குள்ள உண்மையான கள நிலவரம் அறியாமல் தரும் அறிவுறுத்தல்களை சீர்தூக்கி ஆராயாமல் மதி மயக்கும் மாத்திரையாய் செயல்படும் அவர்கள் அனுப்பும் சில லட்சம் பணம் உங்களை செயல் படுத்தவிடலாமா?.

அதன் விளைவாக சிறுமதி படைத்த அனந்தி போன்ற மேடை தோறும் வேசம் போட்டு சேலை மாற்றும் சிங்காரிகள் உங்கள் வாக்குகளால் பதவிக்கு வரலாமா ?

தேர்தலுக்காக உண்டியலில் வந்த பணம் வட்டிக்கு விடப்பட்டு அது குட்டி போடும் தைரியத்தில் தான் அவ துள்ளுகிறா என்பதை அயலவர் அறிவார்கள்.

சேர்க்க வேண்டியது சேர்த்தாகி விட்டது இனி பிள்ளைகளுடன் பத்திரமாய் வாழ்வதற்கு போய் சேர வேண்டிய இடத்தில் சிக்கல் வரக்கூடாது என்பதற்க்காகவே புலிச்சாய சேலையை பத்திரிகையாளர் முன் அவிழ்க்கிறார் ஆனந்தி.., அவர்களும் வாய்பிளந்து பார்த்து எழுதுகிறார்கள்.

அரசியல் புலுடாவின் ஆரம்ப செயல் இது என்பது உங்களுக்கு புரியாதா அனந்திக்கு வாக்களித்த மக்களே ?

அன்று வட மாகாண சபை தேர்தலில் இதை கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வெள்ளிடை மலை.

நாம் வீடுகளில் நாய்க்கு உணவு கொடுப்பது எம்மை காக்கவும் நன்றிமறக்காமல் இருக்கவும் தான்.

அதே போல் எம்வாக்குகளை போடுவது எம் நலன் சார்ந்த பணிகளை செய்யவும் எம்மை விலை பேசாமல் இருக்கவும் தான்.

ஆனால் அனந்திக்கு வாக்களித்த மக்கள் விசர் நாய்க்கு உணவளித்த நிலைக்கு வந்துள்ளனர்.

விசர் வந்தால் நாய் நன்றி பாராட்டாது. கடித்து உங்களுக்கும் விசர்வர வைக்கும். மேலதிகமாக திண்டதை எம் வீட்டு வாசலிலே கக்கி வைக்கும்.

வீட்டுசின்ன கட்சி தலைவர் மாவையார் செய்த செயலால், அனந்தி மயங்கி விழுந்ததாகவும் பின் அது பிரசர் மயக்கம் எண்டும் ஒரு செய்தியும் வந்தது.

அதுக்கு பிறகு சேனாதியார் விதைவைகளை மணமுடிக்க வாங்கோ அவர்களின் பிள்ளைகளை பராமரியுங்கோ எண்டு இளைஞர்களுக்கு விட்ட அழைப்பும் பரவலா இப்ப பேசப்படுற விசயம்.

ஆனா அவற்ற கொடும்பாவியும் இப்ப கொழுத்துப்படுது. அனந்தி அதுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை எண்டு சொல்லுறது, எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என முந்திக் கொள்வது போலத்தான் என்பதை அனந்திக்கு வாக்களித்த மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

செத்தயில இருந்தத கொண்டு வந்து மெத்தையில கிடத்தினாலும் அது செத்தயில செய்தத தான் மெத்தையிலயும் செய்யும்.

அது மாதிரி அனந்திய மாகாண சபைக்கு அனுப்பினாலும் அவ சேலை அவிழ்க்கும் செயலை தான் செய்யிறா.

அதுக்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி தான் என்ற முன்னோர் அனுபவ வாக்கு பொய்த்து போகாது.

போலிகளை கண்டு ஏமாறும் எம் மக்களுக்கு மீண்டும் பட்டை நாமம் போட்டு விட்டார் அனந்தி அக்கா.

நான் தான் கையளித்தேன் என்கணவரை திருப்பித்தா என இராணுவத்திடம் கேட்கும் அதேநிலைமையில் தான், எழிலனால் தம் கண்முன்னால் பிடிக்கப்பட்டவர்களின் தாய் தகப்பன் சகோதரர் மற்றும் உறவுகளின் நிலை. அவர்களும் புலிகளின் எச்ச சொச்சங்களிடம் தான் தம் உறவுகளுக்கு நடந்ததை உறுதிப்படுத்த முடியும்.

அதனால் தான் அனந்தி தரும் தகவல் அறிய அவர்கள் சென்றால், புலனாய்வு பிரிவு துரத்துவதாக புலம்புகின்றா அனந்தி.

உறவுகளை தொலைத்தோர் ஆற்றில் போட்டதை குளத்திலா தேட முடியும்.

எழிலன் பிடித்து சென்றவரின் உறவுகள் பற்றி அவரிடம் கேட்டால், அதற்கு பதில் கூறும் திராணி கூடவா அனந்திக்கு இல்லை. அதில் இருந்து தப்பவா இன்று புலிச்சாய சேலை அவிழ்க்கும் அறிவிப்பு.

புலிகள் அமைப்பில் எதிரியிடம் சிக்கும் நிலை வந்தால் சயனைட் கடிக்க வேண்டும் என்பது கட்டாய விதி. அந்த விதி மீறல் ஆரம்பத்தில் அருணா என்ற புலி பிடிபட்டு பூசாவில் இருந்து பின் கிட்டுவிடம் இருந்த இராணுவதிற்கு பிடிபட்ட புலிகளை பரிமாறும் போது தெரிய வந்தது.

அன்று பிடிபட்ட அருணா சயனைட் கடிக்கவில்லை ஆனால் பின்பு பொதுமன்னிப்பு வழங்கியபின் ஆயுதம் கடத்தியதாக பிடிபட்ட குமரப்பா புலேந்திரன் உட்பட தடுத்து வைக்கபட்ட புலிகள் கடிக்க சயனைட் பிரபாகரனால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விந்தையான விதிமுறையால் வீழ்ந்துபட்ட பல போராளிகள் நம்பிக் கெட்டவர்கள்.

ஏனென்றல் பிரபாகரன் மரணம் கூட சயனைட் கடித்ததால் ஏற்படவில்லை என்பது உறுதியான செய்தி. அவர் சண்டையில் சாகவில்லை என்பது சனல் 4 கொலம் மக்றே கூறும் செய்தி.

எது எவ்வாறாயினும் சண்டையில் செத்திருந்தால் ஒரு குண்டாவது அவர் பருத்த உடலின் முன்பகுதியில் பாய்ந்திருக்கும் புறமுதுகு இட்டு ஓடினால் எங்கு பாயும் என புற நானூறு சொல்கிறது.

இறுதிவரை தன் உயிரை காப்பாற்ற ஓடி தன் பிடரியில் வெடி அல்லது வெட்டு வாங்கிய பிரபாகரன் எந்த வகையறா? சரணடைந்த எழிலன் தந்த வகையறா? சிந்தியுங்கள் மக்களே…

எழிலனின் மனைவி என்ற ஒரே காரணத்தால் வடமாகாண சபை தேர்தலில் களமிறக்கப்பட்டு மாவீரர்களின் வீரத்தை புகழ்ந்து மேடைதோறும் பேசி மக்களின் வாக்குகளை பெற்று மாகாண சபைக்கு தெரிவான அனந்தி,

நீதிபதியாய் தொழில் புரிந்த போது சட்டப்படி தண்டனை வழங்கியவர் பின் தன் மனசாட்சிபடி, பிரபாகரன் மாவீரன் என பேசுகிறார் என மக்கள் நம்பியதால் முதலாம் இடத்தில் வந்தவர் முதல்வர் ஆனதால்

தான் இரண்டாம் இடத்துக்கு வந்ததை கவனத்தில் கொண்டு மந்திரி பதவிக்கு அனந்தி ஆவலோடு காத்திருந்தார்.

தியாகிகளான மாவீரர்களின் ஆத்மா தான் அது நிகழாமல் உங்களை காத்தது என்பதை அனந்திக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் இப்போது அவவின் ஆடை அவிழ்ப்பிற்க்கு பின்னாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

உண்மையில் அந்த இன்னுயிர் நீர்த்தவர்களை நினைவில் கொண்டுள்ளீர்கள் என்றால், இனிவரும் தேர்தலிகளில் உங்கள் நலன் பேணும் கொள்கையை கொண்ட அதை பகிரங்கமாக செயல்ப்படுத்தும் கட்சி வேட்பாளரை தெரிவு செய்யுங்கள்.

அவர்கள் மீது சுமத்தப்பட்ட கொலை பழிகள் ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டு உண்மை நிலைமைகள் வெளிவர தொடங்கிவிட்டது.

கேள்விச் செவியன் ஊரை கெடுத்தான் என்பது போல வீண் வதந்திகளை நம்பி உங்கள் நலன் பேணுபவர்களை விட்டு ஆடை அவிழ்ப்பவர்களுக்கு வாக்களியாதீர்கள்.

கூடிய விரைவில் உங்களால் தெரிவு செய்யப்பட்ட போலி தமிழ் தேசியம் பேசுபவர்களின் அம்மணமும் உங்களை வெட்கி தலைகுனிய வைக்கும்.

அவர்களை விரட்ட உங்கள் வீட்டில் உள்ள பழைய விளக்குமாறு தும்புத்தடிகளை இப்போதே சேர்த்து வைக்க தொடங்குங்கள். தேர்தல் காலத்தில் அவை தேவைப்படும்.

–காரியச்சித்தன்–

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!
Next post 75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது!!