பீகாரில் மாணவர் தலைவர் சுட்டுக்கொலை!!

Read Time:1 Minute, 16 Second

66c83683-8352-4612-a257-d6fc595fa8e6_S_secvpfபீகார் மாநிலம் சிதாமார்கி மாவட்டம் பகடேவ்பூர் கிராமத்தில் அம்பேத்கர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவர் தலைவர் கிஷோரி ராம் (வயது 33) தங்கி இருந்தார். நேற்று அதிகாலையில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அந்த விடுதிக்குள் புகுந்தது. அவர்கள் அங்கு தங்கியிருந்து மாணவர் தலைவர் கிஷோரி ராமை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள சர்தார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கிஷோரி ராம் இறந்து விட்டதாக அறிவித்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஏராளமான மாணவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ரகளையில் ஈடுபட்டனர்.

மாணவர் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைர கிட்டாரை வாசிக்கும் வைர விரல்கள் – வீடியோ இணைப்பு!!
Next post தாலி அகற்றும் போராட்டத்துக்கு கண்டனம்: பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கிய அனுமன் சேனா!!