பதனீர் இறக்கும் தொழிலில் சாதனை படைக்கும் கேரள பெண்கள்!!
இந்தியாவில் அரசு, தனியார் என அனைத்து துறைகளிலும் முதலில் பெண்களை புகுத்தி பல சாதனைகளை செய்தது கேரள மாநிலம். அந்த வகையில் பதனீர் (நீரா) இறக்குவதிலும் கேரள பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
நீரா என்பது தென்னையில் இருந்து இறக்கப்படும் பானம் ஆகும். (தமிழ் நாட்டில் இதை தெளுவு என்பார்கள். தெளுவு சுண்ணாம்பு கலந்து வெள்ளை நிறத்தில் இருக்கும். நீராவிற்கு சுண்ணாம்பு சேர்க்க மாட்டார்கள். காப்பி நிறத்தில் இருக்கும், கள்ளில் போதை உண்டு. நீராவில் இனிப்பு மட்டுமே இருக்கும். நீரா தற்போது கேரளா முழுவதும் விற்பனையாகிறது. 200 மில்லி நீராவின் விலை அரசு சார்பில் நடத்தப்படும் கடைகளில் 30 ரூபாய். அதாவது 1 லிட்டர் நீரா விலை ரூ. 150.
அதே நேரத்தில் தனியார் ஓட்டல் மற்றும் டிப்பாட்மெண்ட் ஸ்டோர்களில் 1 லிட்டர் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரளாவில் நீரா இறக்க ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்று வந்தனர். இதில் பெண்களும் ஈடுபட வேண்டும் என நீரா உற்பத்தி சங்கத்தலைவர் அரவிந்தன் விரும்பினார்.
அதற்காக பஞ்சாயத்து தொழில் உறுதி திட்ட மூலம் அணுகியபோது யாரும் முன்வரவில்லை பின்னர் குடும்ப பெண்கணை அணுகினார். அதில் பலபேர் நீரா உற்பத்தி செய்ய முன் வந்தனர். அவர்களில் ரிஜிலா, வித்யா, கீதா, ஷீனா, சுனிதா என 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு கோழிக்கோடு பைபிரா பெடரேஷன் ஆப் கோக்கனெட் பெடரேஷன் சொசைட்டி சார்பில் தென்னை ஏறி நீரா உற்பத்தி செய்வது குறித்து 40 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
முதலில் அந்த பெண்களுக்கு தென்னை ஏறி வேலை செய்ய கூச்சம், பயம் இருந்தது. இப்போது அதில் வரும் வருமானம் அதைப்போக்கி விட்டது என ஷீனா தெரிவித்தார்.
தென்னை ஏறும் போது காற்று வந்தால் அங்கும் மிங்கும் சாய்ந்து ஆடுவது முன்பு பயமாக இருந்தது. ஆனால் இப்போது பயம் இல்லை. தற்போது அந்த ஆட்டம் ஊஞ்சல் ஆடுவது போல் சுகமாய் உள்ளது. தென்னையை உற்றுப்பார்த்தால் நீண்டு வளர்ந்த ஒரு பெண் போலவே எங்களுக்கு தெரிகிறது என்று கூறுகிறார்.
தென்னை ஏறி நீரா உற்பத்தி செய்ய ஷீனா இவர்கள் இடுப்பில் செதுக்கத்தி இடுப்பி கட்டி வருகிறார்கள். அதில் நிரா சேகரிக்கும் பானையை இணைத்து உள்ளார்கள். தவிர நீரா வெளிவரும் தென்னை பாளையை தட்டி கொடுக்க பயன்படும் கருவி ஆகியவையுடன் இவர்கள் தென்னந்தோப்பில் நுழையும் போதே இவர்களை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடி விடுகிறது.
இந்த 5 பேரும் கூறும் போது, இந்த தொழிலில் எங்களுக்கு தேவையான வருமானம் உள்ளது. காலை, மாலை என இரண்டு நேரம் மரம் ஏற வேண்டும்.
1 லிட்டர் நீரா இறக்கி கொடுத்தால் 50 ரூபாய் கிடைக்கும். ஒருவர் ஒரு நாளைக்கு 10 முதல் 12 லிட்டர் வரை உற்பத்தி செய்வோம். இருப்பினும் ஆபத்தான தொழில் ஆகும். சில பாதுகாப்பு ஏற்பாடு உள்ளதால் இதை நாங்களும் விரும்பி செய்து வருகிறோம் என்றனர்.
வித்யாவின் கணவரும் கள் இறக்கும் தொழில் செய்து வருகிறார். ரிஜிலா கூறும் போது, முதலில் இந்த தொழிலுக்கு வந்த போது சில பெண்களே எங்களை கேலி பேசினார்கள். தற்போது அதில் உள்ள வருமானத்தை பார்த்து அவர்களே எங்களை புகழ்கிறார்கள். அந்த தொழிலுக்கு வரவும் ஆசைப்படுகிறார்கள். இருப்பினும் எங்களது வாழ்க்கை பல கசப்பான சம்பவங்களை உள்ளடக்கியது. இருப்பினும் நாங்கள் செய்யும் தொழில் மூலம் கிடைக்கும் நீரா என்ற இனிப்பு பானத்தை சந்தோஷத்துடன் பொது மக்கள் குடிப்பதை நினைத்தால் பெருமை என கூறினர்.
Average Rating