பாபா ராம்தேவுக்கு மந்திரிக்குரிய அந்தஸ்து-சலுகைகள்: அரியானா அரசு முடிவு!!

Read Time:1 Minute, 54 Second

47513dc1-5f14-40d2-9cfc-5b87769b546a_S_secvpfயோகாசன குருவான பாபா ராம்தேவுக்கு ஒரு மாநில மந்திரிக்குரிய அந்தஸ்துகளையும் சலுகைகளையும் வழங்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.

அரியானா மாநில மக்களிடையில் யோகாசனம் மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் மகத்துவத்தை பிரசாரம் செய்வதற்கான நல்லெண்ண தூதராக பாபா ராம்தேவை அரியானா மாநில அரசு சமீபத்தில் நியமித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் கண்டனமும் தெரிவித்தன.

இந்நிலையில், முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையில் இன்று நடைபெற்ற மாநில மந்திரிசபை கூட்டத்தில் பாபா ராம்தேவுக்கு கேபினெட் மந்திரிக்குரிய அந்தஸ்துகளையும் சலுகைகளையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என மாநில சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனில் விஜி தெரிவித்துள்ளார்.

மந்திரிகளுக்கு உரிய பாதுகாப்பு, மாநில அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஓய்வு இல்லங்களில் தங்குவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இனி பாபா ராம்தேவுக்கு கிடைக்கும். எனினும், இதர மந்திரிகளைப் போல் மாதந்தோறும் சம்பளம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிதர்சனம் இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
Next post துபாயில் உண்மையான ஸ்பைடர்மேன்: பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் 1007 அடி உயர கட்டிடத்தில் ஏறி அசத்தல்-வீடியோ இணைப்பு!!