சேலம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராமத்தில் முதியவர் கொலை!!

Read Time:4 Minute, 39 Second

e542837a-dd78-468f-88a9-9ea76ff79142_S_secvpfசேலம் அருகே வேடுகாத்தான்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தை அடுத்துள்ள திருமலைகிரியில் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஒரு சமூகத்தினர் முயற்சி மேற்கொண்டபோது மற்றொரு சமூகத்தினர் தங்களுக்கும் கோவிலில் சென்று சாமி கும்பிடும் உரிமை வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக வருகிற மே மாதம் 1–ந் தேதி வரை திருமலைகிரி, வேடுகாத்தாம்பட்டி உள்பட 21 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மேலும் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எப்போது என்ன நடக்குமோ? என்ற பதற்றத்திலேயே கிராம மக்கள் இருந்துவந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வேடுகாத்தாம் பட்டியை சேர்ந்த 93 வயது முதியவரை மர்ம கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேடுகாத்தாம்பட்டி அருகில் உள்ள கருப்பண்ண கவுண்டனூர். இந்த ஊரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 94). தோல் வியாபாரியான இவருக்கு கோவிந்தம்மாள், கந்தாயிஅம்மாள் என்ற 2 மனைவிகள். கோவிந்தம்மாள் கருப்பண்ணனை விட்டு தனியே சென்று விட்டார்.

கந்தாயிஅம்மாளுக்கு 5 மகன்கள், மகள்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. கருப்பண்ணன் தனியே வசித்து வந்தார்.

சேலம் குகையில் வசிக்கும் அவரது மகன் பழனிச்சாமி (வயது 51). தினமும் சாப்பாடு கொடுத்து அனுப்புவார். இதுபோல் நேற்று இரவு சாப்பாடு கொடுத்து அனுப்பினார். அப்போது வீட்டில் கருப்பண்ணன் இல்லை.

இதுபற்றி உடனே பழனிச்சாமிக்கு தெரிவிக்கப்பட்டது, இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தந்தையின் வீட்டிற்கு வந்து தந்தையை தேடினார். அப்போது வீட்டுக்குள் கருப்பண்ணன் கழுத்து அறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுபற்றி சேலம் இரும்பாலை போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். இந்த விசாரணையில் கருப்பண்ணன் கையில் 3 தங்க மோதிரம் அணிந்து இருந்தார். இதை திருடர்கள் திருடி கொண்டு கருப்பண்ணனை கழுத்து அறுத்து கொன்று தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இந்த மோதிரம் 4 பவுன் இருக்கும்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் கொலை விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த சேலம் மாநகர துணை கமிஷனர்கள் பாபு, பிரபாகரன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடம் சென்று விசாரித்தனர். பின்னர் முதியவரின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலையில் வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க திருமலைகிரி பகுதியில் கூடுதலாக போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கிறார்கள்.

இந்த கொலையில் துப்புதுலங்க சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தனிப்படை அமைத்தார், இதில் உள்ள போலீசார் கொலையில் ஈடுபட்டது உள்ளூர் ஆசாமிகளா? அல்லது வெளியூர் வாலிபர்களா? என்றும் விசாரித்து வருகிறார்கள். பழைய திருடர்கள் யாரும் கொலையில் ஈடுபட்டனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊட்டியில் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்!!
Next post கொடைக்கானல் ஏரிச்சாலையில் உலா வந்த காட்டெருமைகள்: சுற்றுலா பயணிகள் ஓட்டம்!!