2 மகள்களை கற்பழித்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

Read Time:3 Minute, 18 Second

45a76f30-8ac7-4ff7-873c-959532825da7_S_secvpfகோவை மதுக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35), தச்சு தொழிலாளி. இவரது 2-வது மனைவி சர்மிளா (30). இவரும் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, முதல் கணவரிடம் இருந்து பிரிந்து கோவிந்தராஜை 2-வதாக திருமணம் செய்து கொண்டவர்.

சர்மிளாவுக்கு முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தையும், கோவிந்தராஜ் மூலம் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. முதல் பெண் குழந்தைக்கு 17 வயதும், 2-வது பெண் குழந்தைக்கு 12-வயதும் ஆன நிலையில், கோவிந்தராஜூக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முதல் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் 2 முறை கர்ப்பமாகி, கருவை கலைத்துள்ளனர்.

இதற்கிடையில் கோவிந்தராஜின் உறவுக்காரரான அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவணன் (21) என்பவர் வேலைதேடி கோவைக்கு வந்து கோவிந்தராஜ் வீட்டில் தங்கினார். அப்போது கோவிந்தராஜ் தனது மூத்த மகளிடம் தவறாக நடப்பதை கேள்விப்பட்டு, அனுதாபத்துடன் அவரையே திருமணம் செய்து உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். பின்னர் அந்த பெண்ணை பிளஸ்-2 படிப்பதற்காக விடுதியில் சேர்த்துவிட்டனர். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று கோவிந்தராஜ் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சரவணன் அந்த பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. போலீசார் சரவணனை கைது செய்து அந்த பெண்ணை மீட்டனர்.

அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, கோவிந்தராஜ், தன்னை பல முறை கற்பழித்ததாகவும், தன்னை மட்டுமின்றி தனது தங்கையையும் கற்பழித்ததாகவும் கூறினார். இதனால் இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி.சுப்பிரமணியம், சரவணனை விடுதலை செய்தார். கோவிந்தராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். அந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட 2-வது குழந்தையின் பாதுகாப்புக்கு வழங்க வேண்டும். மேலும் அந்த குழந்தைக்கு அரசு நிவாரண தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்குறிச்சி அருகே பூச்சு கொல்லி மருந்து டப்பாவை முகர்ந்து பார்த்த குழந்தை சாவு!!
Next post பவர் ஸ்டாரை எனக்கு பிடிக்கும்…!!