கள்ளக்குறிச்சி அருகே பூச்சு கொல்லி மருந்து டப்பாவை முகர்ந்து பார்த்த குழந்தை சாவு!!

Read Time:1 Minute, 59 Second

0b79e702-8a7e-49bc-ab9d-ae6d823d35b6_S_secvpfகள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 26), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. இவர்களது 1½ வயது பெண் குழந்தை தர்ஷிணி. நேற்று ராஜ்குமார் நிலத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து பரமேஸ்வரி குழந்தை தர்ஷிணியை விளையாட விட்டு விட்டு வீட்டில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை மயங்கி கிடப்பதை கண்டு பரமேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். அருகில் விவசாய நிலத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து டப்பா கிடந்தது. தர்ஷிணி விளையாடி கொண்டிருந்தபோது காலி பூச்சு மருந்து டப்பாவை முகர்ந்து பார்த்துவிட்டு அதில் இருந்த ஒரு சில துளி பூச்சு கொல்லி மருந்தை குடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

உடனடியாக குழந்தையை மீட்டு சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே குழந்தை தர்ஷிணி பரிதாபமாக இறந்து போனது.

இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார் – பரமேஸ்வரி தம்பதிக்கு தர்ஷிணி ஒரே குழந்தை என்பது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரோந்து பணியின்போது போலீஸ்காரரை தாக்கிய 2 தொழிலாளர்கள் கைது!!
Next post 2 மகள்களை கற்பழித்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!