திருமணம் நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

Read Time:1 Minute, 52 Second

7b202312-c0f4-46aa-816a-51747624b52d_S_secvpfகேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள அப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அனில்குட்டன்(வயது 29). இவர் திரிபுரா மாநிலத்தில் உள்ள 12–வது பட்டாலியனில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.

அனில்குட்டனுக்கும் புதுக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் வருகிற 23–ந் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அடுத்தவாரம் ஊருக்கு வருவதாக அனில்குட்டன் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அனில்குட்டனின் பெற்றோரை அவரது நண்பர்கள் போனில் தொடர்பு கொண்டனர்.

அனில்குட்டன் திடீரென்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கண்ணீர் மல்க கதறிதுடித்தனர்.

அனில்குட்டன் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்தார்? என்ற விவரம் தெரியவில்லை. வருகிற 23–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அனில்குட்டன் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடை பெறுகிறது.

அனில்குட்டனின் உடல் இன்று இரவு எர்ணாகுளத்துக்கு விமானத்தில் வந்து சேருகிறது. அதன் பின்னர் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்து கோவில் வரைபடங்களுடன் ஆந்திராவில் சிமி தீவிரவாதி கைது!!
Next post இரணியல் அருகே உறவினர்களை ஏமாற்ற குழந்தையை திருடினேன்: கைதான இளம்பெண் வாக்குமூலம்!!