கோவையில் ஒரு தலைக்காதலில் விபரீதம்: விஷம் குடித்த வாலிபர் சாவு!!

Read Time:3 Minute, 26 Second

32ab43e1-5a9d-4a98-83a9-b419b804caa3_S_secvpfதஞ்சாவூர் அருகேயுள்ள செக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 26). 10–ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள மோட்டார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.

ஸ்ரீதர் வேலைபார்க்கும் கம்பெனி அருகேயுள்ள நிறுவனத்தில் ஒரு இளம் பெண் வேலைபார்த்து வருகிறார். அவரை ஸ்ரீதர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் அவரை விரும்பவில்லை எனத்தெரிகிறது.

இந்த நிலையில் ஸ்ரீதர் அந்த பெண்ணை சந்திக்க அடிக்கடி கம்பெனிக்கு வருவது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வெளியே சொன்னால் நமக்கும், நமது பெண்ணுக்கும் தான் அவமானம் என நினைத்து வீட்டை காலிசெய்து வேறு இடத்துக்கு சென்று விட்டனர்.

பெண்ணுக்கு வேறு சிம்கார்டும் வாங்கிக் கொடுத்து விட்டனர். மேலும் அந்த பெண்ணை எச்சரிக்கையாக இருக்குமாறு கூறி மறுபடியும் வேலைக்கு அனுப்பினர்.

மேலும் தனது மகள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு வந்த அந்த பெண்ணின் பெற்றோர் எனது மகளை தேடி அந்த வாலிபர் வந்தால் அவரை அனுமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.

இதனால் ஸ்ரீதருக்கு தனது காதலியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தனது காதலி வேலைக்கு வருகிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்த ஸ்ரீதர் அக்கம் பக்கம் விசாரித்தார்.

பின்னர் தனது காதலி அந்த கம்பெனியில் தான் வேலைபார்க்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டார்.

எனவே நேற்று மீண்டும் அந்த கம்பெனிக்கு தனது காதலியை சந்திப்பதற்காக வந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை அவமானப்படுத்தியதோடு தாக்கியதாகவும் தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த ஸ்ரீதர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீஸ் நிலையம் அருகே விஷம் குடித்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.50 மணி அளவில் ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒருதலைக்காதல் விவகாரத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்!!
Next post சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை!!