சென்னை விமான நிலையத்தில் 150 பவுன் நகையை உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்தவர் கைது!!

Read Time:1 Minute, 8 Second

982a2f44-2063-429f-95fb-ac2351eed43f_S_secvpfநேற்று இரவு 12.15 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கு வந்தது. அதில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஒரு பயணியின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது.

அவரை அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்க நகையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவரது உள்ளாடையில் மொத்தம் 150 பவுன் நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.36 லட்சம். இதையடுத்து அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உள்ளாடையில் மறைத்து நகைகளை கொண்டு வந்தவரின் பெயர் முத்து (32). ராமநாதபுரத்தை சேர்ந்தவர். அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்து பிரச்சினையில் கணவர் முதல் மனைவியின் மகளை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!
Next post நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் குழந்தை திருட்டு: டாக்டர்–நர்சு மீது 2 பிரிவுகளில் வழக்கு!!