பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு!!

Read Time:2 Minute, 28 Second

ba7d700e-85d3-4c10-9a6c-ea7957d4af7a_S_secvpfகோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமானது ஏப்ரல் முதல் அனைத்து பகுதிகளிலும் பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் கோவை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் மல்லிகா உத்தரவின் பேரில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை பொருத்தவரை 9 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிளாரன்ஸ் தலைமையில் பள்ளிக் கல்விக்குழு, மேலாண்மைக்குழு, சத்துணவு, அங்கன்வாடி திட்டப் பணிகளின் உதவியுடன் 15 ஆசிரியப்பயிற்றுநர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். சின்னத்தடாகம், 24. வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று 6 வயது முதல் 14 வயது வரையிலான பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்தனர்.

குறிப்பாக ஆதிவாசிகள் கிராமங்களான மருதங்கரை மேல்பதி, கீழ்பதி, மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆதிதிராவிடர் குடியிருப்புகள், செங்கல் சூளைகள், பெரும் கட்டுமான குடியிருப்பு இடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல மலையாள நடிகர்– அரசியல் பிரமுகர்கள் கற்பழித்தனர்: சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
Next post கோவை உப்பிலிபாளையத்தில் பொதுமக்களை கடித்து குதறும் வெறிநாய்கள்!!