பிரபல மலையாள நடிகர்– அரசியல் பிரமுகர்கள் கற்பழித்தனர்: சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
கேரளாவை சேர்ந்தவர் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர். இவர் கேரள மற்றும் தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் பொருத்தி தருவதாக பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து சரிதாநாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சரிதாநாயர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் சரிதா நாயர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது எழுதியதாக கூறி ஒரு கடிதம் கேரளாவில் வெளியானது. அதில் கேரள நிதி மந்திரி மாணியின் மகனும் எம்.பி.யுமான ஜோஸ் கே.மாணியும் சரிதாநாயரை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை சரிதாநாயரும், ஜோஸ் கே.மாணியும் மறுத்தனர்.
இந்த பிரச்சினை பற்றி திருவனந்த புரத்தில் சரிதாநாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். பேட்டியில் சரிதாநாயர் கூறியதாவது:–
என்னை மிரட்டியவர்கள், பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பற்றி சிறையில் இருந்த போது நான் கடிதம் எழுதியது உண்மைதான். ஆனால் தற்போது நான் எழுதியதாக கூறி வெளியாகி உள்ள கடிதம் உண்மையானது அல்ல.
நான் எழுதிய கடிதத்தில் ஜோஸ் கே.மாணியை குற்றம் சாட்டவில்லை. அதே சமயம் என்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்து உண்மைதான். அவர்கள் அனைவர் பற்றியும் அந்த கடிதத்தில் நான் எழுதி உள்ளேன்.
அந்த கடிதம் வெளியானால் கேரள அரசியலில் பெரும் பூகம்பம் ஏற்படும். தற்போது அந்த கடிதத்தை வெளியிடும் எண்ணம் இல்லை. அந்த கடிதம் வெளியானால் அதை வைத்து பலரும் மிரட்ட தொடங்கி விடுவார்கள். நான் வாழ்க்கையில் சந்தித்த உண்மை சம்பவங்களையும், கொடுமைகளையும்தான் அதில் வெளிப்படுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சரிதாநாயர் தான் எழுதிய கடிதத்தை நிருபர்களிடம் காண்பித்தார். அந்த கடிதம் 30 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. ஆனால் அந்த கடிதத்தை அவர் வெளியிட மறுத்து விட்டார். இதனால் அந்த கடிதத்தில் உள்ள முழுமையான தகவல்கள் தெரியவில்லை. சரிதாநாயர் கடிதத்தை காட்டியதோடு அதில் சில பக்கங்களை புகைப்பட நிபுணர்கள் தங்கள் கேமராவால் படம் எடுத்து விட்டனர்.
அதை வைத்து பார்த்த போது அந்த கடிதத்தில் சரிதாநாயர் குற்றம் சாட்டி இருந்த சிலரின் பெயர்கள் தெரியவந்துள்ளது. தற்போது மலையாள படஉலகில் பிரபலமாக உள்ள ஒரு நடிகரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் தன்னை வற்புறுத்தி இச்சைக்கு பயன்படுத்தி கொண்டதாக சரிதா நாயர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் தான் டெல்லி சென்று இருந்தபோது சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் தன்னை பலவந்தப்படுத்தியதாகவும் பெயர்களுடன் சரிதாநாயர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.
Average Rating