மந்திரி மாணி மகன் மீது செக்ஸ் புகார்: சரிதா நாயர் எழுதியதாக வெளியான பரபரப்பு கடிதம்!!

Read Time:2 Minute, 39 Second

acbc62a7-37f2-4eda-9a73-db6ec8941c80_S_secvpfகேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ஏராளமானோரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தபோது இவர் பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக நடந்த விசாரணையின்போது அவர் தன்னை அரசியல் பிரமுகர்கள் பலரும் ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததாக 24 பக்க கடிதம் ஒன்றை எழுதி ஜெயில் அதிகாரியிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு சரிதாநாயர் ஜெயிலில் வைத்து எழுதியது போன்ற ஒரு கடிதம் தபாலில் வந்தது. இந்த கடிதத்தில் சரிதா நாயர் கேரள நிதி மந்திரி மாணியின் மகனும், எம்.பி.யுமான ஜோஸ்.கே. மாணி சரிதாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கடித தகவல்கள் வெளியான சில மணி நேரத்தில் சரிதா நாயர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஜோஸ் கே. மாணியுடன் தொடர்பு என்ற தகவல் தவறானது என்றும், தான் எழுதிய கடிதத்தில் அவ்வாறு எதையும் குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே ஜோஸ்.கே. மாணியும் இந்த தகவலை மறுத்தார். தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க செய்யப்படும் சூழ்ச்சி என்று கூறினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்வேன். போலியான தகவலை பரப்பியவர்கள் யார்? எதற்காக பரப்பப்பட்டு என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடுவேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு காலத்தில் கைதியாக இருந்தவரின் மென்பொருள் கண்டுபிடிப்பு: அரியானா மாநில சிறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது!!
Next post கஞ்சா விற்பதாக கூறி கிராமத்து பெண்ணை சித்ரவதை செய்யும் போலீசார்!!