உ.பி-யில் பயங்கரம்: உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி!!

Read Time:1 Minute, 31 Second

7f635094-a4fe-4501-b584-87da9be22b67_S_secvpf6 வயது சிறுமி ஒருவர் தனது உறவினர் ஒருவராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அச்சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அட்டாரியா பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த சமயத்தில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உறவுக்கார வாலிபர் அன்கித்(20) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மோசமாக பாதிக்கப்பட்ட சிறுமியை அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டான் அந்த கொடூரன்.

குடும்ப உறுப்பினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மிகவும் கவலைக்கிடமான நிலையில் கிடந்துள்ளார் சிறுமி. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை தீவிரமாக தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரியானாவில் ட்ரங்க் பெட்டியில் இளஞ்ஜோடி சடலம் கண்டெடுப்பு: கவுரவக்கொலை என சந்தேகம்!!
Next post இங்கிலாந்து மற்றும் இண்டர்போல் போலீசாரால் தேடப்பட்ட பாலியல் பலாத்கார குற்றவாளி டெல்லியில் கைது!!