6 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை!!

Read Time:2 Minute, 14 Second

68462abd-cb38-407f-a25f-7a038d46f3be_S_secvpfடெல்லியில் 6 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது வாலிபனுக்கு இன்று 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு 15 அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு டெல்லி நீதித்துறை சேவை மையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நாட்டின் சொத்தாக கருதப்படும் சிறுவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இந்த நாட்டின் நலனும் எதிர்காலமும் சிறுவர்கள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதில்தான் அடங்கியுள்ளது. குழந்தைகளின் நல்வாழ்வும், சுகவாழ்வும் எந்த நாகரிக சமுதாயத்துக்கும் மிகவும் இன்றியமையாதது. இவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு.

இந்த வழக்கு நடைபெற்றுவந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், இதர சாட்சிகள் கூறிய சாட்சியங்களுடன் அந்த வாக்குமூலம் பொருந்தி இருந்தது. இதுதவிர, மருத்துவ பரிசோதனையிலும் அவன் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானது தெளிவாக நிரூபணமாகியுள்ளதால் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடுகிறேன் என டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி கவுதம் மனன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 150 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்!!
Next post அரியானாவில் ட்ரங்க் பெட்டியில் இளஞ்ஜோடி சடலம் கண்டெடுப்பு: கவுரவக்கொலை என சந்தேகம்!!