வியர்வை அதிகரிக்கும்போது நறுமணம் அதிகரிக்கும் வாசனைத் திரவியம் – இலங்­கை­ய­ரான கலா­நிதி நிமல் குண­ரட்ன தலை­மை­யி­லான விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டிப்பு!!

Read Time:1 Minute, 53 Second

unnamed (43)உடலில் வியர்வை அதி­க­மா­கும்­போது அதிக நறு­மணத்தை ஏற்­ப­டுத்தும் வாசனைத் திர­வி­ய­மொன்றை தாம் உரு­வாக்­கி­யுள்­ள­தாக பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.

வியர்வை அதி­க­ரிப்­புக்கு ஏற்­ப வாசனை அதி­க­ரிக்கும் உலகின் முதல் வாசனைத் திர­வியம் இது­வாகும்.

இது உடல் துர்­நாற்­ற­த்­தையும் குறைக்கும் என வட அயர்­லாந்தின் பெல்பாஸ்ட் நக­ரி­லுள்ள குயின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த வாசனைத் திர­வியம் நீருடன் கலக்­கும்­போது அதிக நறு­ம­ணத்தை வெளி­யி­டு­கி­றது.

இக்­கண்­டு­பி­டிப்­பா­னது புதிய முறை­யி­லான வாசனைத் திர­விய தயா­ரிப்­பு­க­ளுக்கு வழி­வ­குப்­பதன் மூலம், பாரிய வர்த்­தக சாத்­தி­யப்­பா­டு­களைக் கொண்­டுள்­ளது என இந்த ஆய்­வுத்­திட்­டத்தின் தலை­வ­ரான கலா­நிதி நிமல் குணரட்ன தெரி­வித்­துள்ளார்.

இது அழ­கு­சா­தன கிறீம் தயா­ரிப்பு போன்­ற வற்­றுடன் வேறு விஞ்­ஞா­னத்­து­றை­க­ளிலும் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம்” என அவர் கூறி­யுள்ளார்.

இத்­திட்டம் தொடர்­பாக வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனமொன்றுடன் ஏற்கெனவே தாம் இணைந்து செயற்படுவதாக குயின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மியாமி பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை செரீனா எட்டாவது தடவையாக சுவீகரித்தார்!!
Next post 150 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்!!