தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி!!

Read Time:1 Minute, 42 Second

2001df1e-ebac-4edf-b853-22d2cef02315_S_secvpfதொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய இருந்த தடையை நீக்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பெண்கள் இரவில் வேலை பார்க்க இருந்து வரும் தடையை நீக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மாநில தொழிற்சாலைகள் இயக்குனரகத்தை தொடர்பு கொண்டு தடையை நீக்க உத்தரவிட்ட அவர் தகுந்த பாதுகப்பு வசதிகளுடன் பெண்களை இரவில் வேலை செய்ய அனுமதிக்கும்படி தெரிவித்து உள்ளார்.

மேலும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும், ஆண்களுக்கு சமமான வாய்ப்புகள், சாப்பாட்டு அறைகள், போதுமான கழிவறை வசதிகள் கட்டிகொடுக்க வேண்டும், அவர்களின் குழந்தைகளுக்கு காப்பகம் வசதி, பாலியல் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழுக்களை அமைப்பது, முக்கியமாக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என நிறுவனங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டில் அடைத்து வைத்து 14 வயது சிறுமியை 3 நாள் கற்பழித்த வாலிபர் கைது!!
Next post மராட்டியத்தில் 55 மாணவிகள் மானபங்கம்: 3 ஆசிரியர்கள் கைது!!