மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: 4 பேரை கைது செய்தது கோவா போலீஸ்!!

Read Time:2 Minute, 0 Second

b29626cc-df01-4406-bcb2-c0d538988f71_S_secvpfகோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி தந்த புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடையில் ஸ்மிரிதி சில துணிகளை வாங்கினார். பின்னர் அந்த உடை தனது உடலுக்கு பொருத்தமாக உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையினுள் இருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார். அப்போது, வெளியே காத்திருந்த மந்திரியின் உதவியாளர், உடை மாற்றும் அறையை குறிவைத்தபடி ஒரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக, மந்திரி ஸ்மிரிதி இராணிக்கு இது தொடர்பான தகவலை தெரிவித்து எச்சரித்தார்.

இதனையடுத்து, அறையினுள் இருந்து வெளியே வந்த ஸ்மிரிதி இராணி போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்தின் முக்கிய தலைவர்களை நாளைய விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவட்டாருக்கு கைக்குழந்தையுடன் தேடிவந்த காதல் கணவரை விரட்டியடித்த இளம்பெண்!!
Next post அமெரிக்கப் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கருப்பை புற்றுக்கட்டி அகற்றம்: டெல்லி டாக்டர்கள் சாதனை!!