யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)!!

Read Time:2 Minute, 10 Second

10931083_802927116456971_8436288251001575215_n (1)யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.

இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திருப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன்,

இந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
11081257_802927136456969_6268730983164987839_n

11102664_802927139790302_8516207024932534854_n

11133831_802927073123642_2312310634110572907_n

10931083_802927116456971_8436288251001575215_n

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் இரண்டாவது கணவர் மகளை வல்லுறவு செய்த கொடுமை!!
Next post அடுத்தவரின் போனுக்கு அனுப்பிய SMS அழிக்க புதிய APP…!!!