49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு: 2 வக்கிர ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு!!

Read Time:2 Minute, 9 Second

63599e09-65c9-47d7-8cc6-9994c8b8e37e_S_secvpfமகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா நகரில் 49 பள்ளி மாணவிகளுக்கு தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கேவை கடந்த செவ்வாய்க்கிழமை 2 பள்ளி மாணவிகள் சந்தித்தனர். அப்போது, அவர்கள் தங்களுக்கு வேதியியல் மற்றும் உயிரியல் வகுப்பெடுக்கும் 2 வக்கிர குணமுள்ள ஆசிரியர்கள் வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளிடமும் ஆபாசமாக பேசுவது, தொட முயற்சிப்பது என்று நீண்ட காலமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இதை யாரிடமாவது வெளியே சொன்னால் செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

அந்த பள்ளியின் தலைமையாசிரியர், அவசர அவசரமாக பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். இதற்கிடையே வக்கிர ஆசிரியர்களில் ஒருவரான ராஜன் கஜ்பியே, மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தை வாபஸ் வாங்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காவல் நிலையம் முன்பு திரண்ட மாணவிகளின் பெற்றோர்கள் அந்த 2 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ராஜன் கஜ்பியே, ஷைலேஷ் ராம்தேகே இருவர் மீதும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டாள்கள் தின குறும்பு என நினைத்து மகனின் மரண செய்தியை நம்ப மறுத்த பெற்றோர்!!
Next post மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கிய புதுவை பேராசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை!!