காட்பாடியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீயில் கருகி மர்ம சாவு: கணவரிடம் விசாரணை!!

Read Time:2 Minute, 21 Second

0fe920f5-0ca6-4339-acae-bac62008773b_S_secvpfகாட்பாடி செங்குட்டை நேரு தெருவை சேர்ந்தவர் செல்வம் (32). இவரது மனைவி விதுபாலா (26). இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆதிஸ் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது.

செல்வம் தனது குடும்பத்துடன் திருமணத்திற்கு பின்பு செங்குட்டையில் உள்ள மாமனார் வீட்டிலேயே வசித்து வருகிறார். செல்வத்துக்கும் மனைவி விதுபாலாலவுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் தங்களது அறைக்கு உறங்க சென்றனர். நள்ளிரவில் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த விதுபாலா குழந்தை ஆதிஸ் ஆகியோர் தீயில் சிக்கி அலறி கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்து விதுபாலாவின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விதுபாலா இறந்தார். குழந்தை இன்று காலை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து காட்பாடி போலீசில் இளம்பெண்ணின் தந்தை முனுசாமி புகார் அளித்தார்.

அதில் படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த தனது மகளையும், அவரது குழந்தையையும் குடும்ப தகராறு காரணமாக மண்எண்ணெய் ஊற்றி மருமகன் செல்வம் கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். இது தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினிகாந்த் பட விவகாரம் – சமரசம் – வழக்கு தள்ளுபடி!!
Next post காங்கயத்தில் கோவில் கொள்ளை வரைபடம் தயாரித்து கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்!!