நெல்லை அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு: 3 பெண்டாட்டிக்காரர் கைது!!

Read Time:1 Minute, 58 Second

21c986a5-c5eb-4e33-aa82-49d8c18dc57f_S_secvpfநெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள குருந்தமொழியை சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி மல்லிகா (வயது 11, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கீழக்கலங்கலில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இன்று அதிகாலை மல்லிகா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி அந்தோணி (40) என்பவர், மல்லிகாவின் வாயை பொத்தி அங்குள்ள மறைவான பகுதிக்கு தூக்கி சென்று கற்பழித்தார். அவளது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் வருவதை அறிந்ததும் அந்தோணி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதையடுத்து பொதுமக்கள் மயக்கமுற்ற நிலையில் இருந்த மல்லிகாவை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மல்லிகாவின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அந்தோணியை கைது செய்தனர். கைதான அந்தோணி 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்கள் மூலம் 5 குழந்தைகள் உள்ளது. 6–ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்செந்தூர் அருகே திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை: காதலன் கைது!!
Next post கிரிக்கெட் மைதானம் யாருக்கு சொந்தம்?: பழங்குடியின சிறுவர்களை தாக்கிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது!!