புலிகளின் தற்கொலை படை தினம்

Read Time:2 Minute, 46 Second

LTTE.Miller.jpgபுலிகளின் தற்கொலைப் படையான கருப்புப் புலிகள் பிரிவு தொடங்கப்பட்டதன் 19வது ஆண்டு விழாவை புலிகள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து கொழும்பில் ராணுவத்தினரும் போலீசாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கருப்பு புலிகள் என்ற இந்தப் படை கடந்த 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டு முதல் தாக்குதல் ஜூலை 5ம் தேதி நடந்தது. இத்தாக்குதலை மில்லர் என்பவர் தலைமை தாங்கி நடத்தினார்.

வெடிபொருள் நிரப்பப்பட்ட லாரியுடன் சென்ற அவர் ராணுவ முகாம் மீது மோதினார். இதுதான் புலிகள் நடத்திய முதல் தற்கொலைப் படைத் தாக்குதலாகும். இந்தத் தாக்குதல் நடந்ததன் 19வது ஆண்டு தினத்தை புலிகள் இன்று கொண்டாடுகின்றனர்.

புலிகளின் தற்கொலைப் படை நினைவு தினத்தையொட்டி தலைநகர் கொழும்பில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு விழாவை முன்னிட்டு தற்கொலைப் படைத் தாக்குதலை தலைநகரில் புலிகள் நடத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இதனால் ராணுவம் அதிகபட்ச உஷார் நிலையில வைக்கப்பட்டுள்ளது.

புலிகள் இதுவரை நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களில் அவர்களது தரப்பில் 273 பேர் உயிரிழந்துள்ளனர். புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலிலேயே மிகப் பெரியது என்று கூறப்படுவது 1996ம் ஆண்டு நடந்த தாக்குதல்தான். இலங்கை மத்திய வங்கியின் மீது நடந்த அந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல கொழும்பு விமான நிலையத்தின் மீதும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதுதவிர இந்திய முன்னாள் பிரதமர் ராஐPவ்காந்தி இலங்கையின் முன்னாள் அதிபர் பிரேமதாசாவும் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில்தான் உயிரிழந்தார். முன்னாள் அதிபர் சந்திரிகா தனது ஒரு கண்ணைப் பறிகொடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெற்றிகரமாக ஏவப்பட்டது டிஸ்கவரி!
Next post லண்டனில் தீ விபத்து 3 தமிழர்கள் பலி.