ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய உதவி!!

Read Time:2 Minute, 11 Second

vijaiநடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது அயனாவரம் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜேஷ் அண்ணா நகர் ஆர்ச் அருகில் வாடகை தள்ளுவண்டியில் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு சூப் கடை நடத்தி கொண்டு இருந்தார். அவருக்கு விஜய் தன் சொந்த செலவில் டிபன் கடை வண்டி வழங்கினார்.

கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தில் உள்ள லட்சுமி நகரில் டிபன் கடை, இஸ்திரி கடையை திருமதி.ஞானம் பிரகாசமும் அவருடைய மகன் லூர்துசாமியும் வாடகை வண்டியில் நடத்திக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு விஜய் தன் சொந்த செலவில் டிபன் கடை வண்டி வாங்கிக் கொடுத்தார்.

திருமதி.ஞானம்பிரகாசம் மகனுடன் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து வண்டியை பெற்றுக் கொண்டு சென்றார். நீலாங்கரை பகுதியிலுள்ள முருகன் என்பவர் பழம், இளநீர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் வண்டி பழுதடைந்து விட்டதால் வியாபாரம் செய்ய கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார்.

இது விஜய் கவனத்திற்கு சென்ற உடன் உடனடியாக வியாபாரம் செய்ய தேவையான மூன்று சக்கர வண்டியை தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்தார். முருகனிடம் வியாபாரம் எப்படி நடக்கிறது? என்று கேட்டு விசாரித்து வண்டியை வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிரிக்கெட் மைதானம் யாருக்கு சொந்தம்?: பழங்குடியின சிறுவர்களை தாக்கிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது!!
Next post உ.பி யில் தொடரும் கொடூரம்: துப்பாக்கி முனையில் 2 இளம் சகோதரிகள் பாலியல் வன்புணர்வு!!